எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செய்திகள் என்ன சொல்லுது? 1. ஒரு லட்சம் கிராமங்களுக்கு...

                    செய்திகள் என்ன சொல்லுது?   


 1. ஒரு லட்சம் கிராமங்களுக்கு 2 லட்சம் மினி ஏடிஎம் மிஷன்கள். ரூ.120 கோடி செலவில் நபார்டு வங்கி வழங்குகிறது. கிராம மக்களிடம் என்ன வருமானம் இருக்கிறது ஏடிஎம். வைப்பதற்கு, நகர்புறத்திலே இருக்கிற ஏடிஎம் – களை ஒழுங்கா வைச்சிருந்தா போதாதா? 

 2. ஜெ.வின் அரசியல் வாரிசாக சசிகலா மட்டுமே - தம்பிதுரை எம்.பி.கருத்து.      ஆமா ஆமா… பொழப்பு நடக்கனுமில்லே. தன்மானம் இல்லாத தம்பி. 

 3. சேகர் ரெட்டியின் காட்பாடி வீட்டில் கத்தை கததையாக பணம், நகை பறிமுதல். மோடிக்கு துணை போனவர்கள் கைதாகிறார்கள்.      மக்கள் புதிய 500, 2000 ரூபா நோட்டு கூட கிடைக்காம தவிச்சிகிட்டிருக்காங்க. இவங்களுக்கு மட்டும் எப்படி இப்படி கோடிகோடியா கிடைக்கிறது. எல்லாம் சிபாரிசு இல்லாம நடக்குமா? 

4. நாடாளமன்றத்தில் எந்த அலுவலும் நடைபெறவில்லை. செல்போன் மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி குற்றச்சாட்டு.      வெளியிலே வாய்கிழிய பேசறீங்க. மன்றத்திலே போய்  பேச வேண்டியதுதானே. 


5. மாயவலையில் சிக்காத செங்கோட்டையன்.      J J வலையில் சிக்கியவர்கள் SK வலையில் சிக்காமலா போவார்கள். ஆதாரம் ‘ தி இந்து – நாளிதழ் – 12-12-2016. தகவல் ; ந.க.துறைவன்.          

பதிவு : துறைவன்
நாள் : 12-Dec-16, 10:13 am

மேலே