எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்னும் எத்தினை உயிரைப் பருகும் இந்த பூமி.... உழவன்...

இன்னும் எத்தினை உயிரைப் பருகும்
இந்த பூமி....

உழவன் ஏங்குகிறான்
தற்கொலையே
இதற்கு உணவு
என்று
மடிந்து கொண்டிருக்கிறான்...

இதனை தெரிந்த
சில உருவமும்
கண்டும் காணாததுபோல்
சில உருவமும்
நடைபாதையில்
ஊர்ந்து கொண்டுதான் 
இருக்கிறது...

ஆனால்
பதில்
தீர்வு
எவ்விடத்தில் எங்கிருந்து
கை கொடுக்கும்
என்று நான்
காத்திருக்கிறேன் 
காத்திருக்கிறேன்...

மேகங்களே இதோ எனது
கண்ணீர்த்துளிகள் துன்பத்துடன் ஊர்ந்து 
வருகிறது
முச்சுக்காற்றில் ....


உனக்காக எங்கள்
உயிரைக் கொடுக்கிறோம்
இந்த பூமிக்காக நீயாவது
கண்ணீர் சிந்த மாட்டாயா
தாகங்களை தீர்க்க மாட்டாயா.....

பதிவு : ரா சுரேஷ்
நாள் : 5-Jan-17, 2:24 pm

மேலே