எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக இரண்டு கட்சிகளின்...

அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் பொது மக்கள் பார்வையில் ஒரே மேடையில் விவாதிக்கிறார்கள். உலக மக்கள் அனைவரும் தொலைக்காட்சி வாயிலாக அவர்களின் விவாதங்களையும் காணும் வாய்ப்பையும் அளிக்கிறார்கள்.
☺☺☺☺☺☺☺☺
நம் நாட்டிலும் அது போல அரசியல் கட்சியின் தலைவர்களை விவாத மேடைகளில் ஏற்றினால் எப்படி இருக்கும்.
☺☺☺☺☺☺☺☺☺☺
அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கும் ட்ரம்பிற்கும் கடுமையான போட்டி.
☺☺☺☺☺☺☺
சில பெண்கள் ட்ரம்ப் கடந்த காலத்தில் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொலைக்காட்சியில் கூறியதையும் பார்த்தோம்.
☺☺☺☺☺☺☺
ஹிலாரியும் அது போன்ற குற்றச்சாட்டுக்களை ட்ரம்ப் மீது சுமத்தினார்.
☺☺☺
கடந்த காலத்தில் போதைப் பொருளைப் பயன்படுத்தியவர் ஹிலாரி என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.
☺☺☺☺☺☺
ஆனால் கட்சித் தொண்டர்களிடையே எந்தவித மோதலும் ஏற்படவில்லை.
☺☺☺☺☺☺☺☺

அத்தகைய விவாத மேடைகளில் நம் நாட்டில் பலம் வாய்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களை மோதவிட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
☺☺☺☺☺
நம் நாட்டில், குறிப்பாக தமிழ் நாட்டில், கட்சித் தொண்டர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது என்பதை ஊடகங்களின் வாயிலாக நாம் அறிவோம். இங்கு அத்தகைய விவாதங்களில் தலைவர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டால் என்ன நடக்குமென்று கற்பனை செய்து பாருங்கள்.
☺☺☺☺☺☺


நம் நாட்டில் சட்டத்தை மதிக்காதவர்களே எண்ணிக்கையில் அதிகம்.
☺☺☺☺☺
சிங்கப்பூர் குட்டி நாடு. பிற நாடுகளுக்கு மிகச் சிறந்த முன் உதாரணமாகத் திகழ்கிறது.
அங்கு பாதையோரம் எச்சில் துப்பினால்கூட அபராதம் வசூலிக்கப்படுகிறதாம்.
☺☺☺☺☺
இங்கு பொது இடங்களில் நடக்கும் அட்டகாசமான செயல்களை எண்ணிக்கையில் அடக்க முடியாது.
☺☺☺☺☺☺
மக்கள் எவ்வழி அரசியல்வாதிகளும் அவ்வழி.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💐

பதிவு : மலர்91
நாள் : 9-Jan-17, 12:31 am

மேலே