உலகிலேயே பெரிய மலை எது ? எவரெஸ்ட் மலை...
உலகிலேயே பெரிய மலை எது ? எவரெஸ்ட் மலை ?
ஆம் .. இல்லை. எதில் எது உங்கள் பதில் ?
.
கடல் மட்டத்தில் இருந்து அளந்து பார்க்கும் போது எவரெஸ்ட் சிகரம் தான் மிகவும் பெரிதான மலை என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால், இதுவே கடலில் காணப்படும் மலைகளுடன் ஒப்பீட்டுப் பார்க்கும் போது எவரெசுட்டு சிகரம் உயர்ந்த மலையே அல்ல!
ஹவாய் தீவில் காணப்படும் மவுனா கேய் (Mauna Kea) எனப்படும் மலை தான் மிகவும் பெரிதானது ஆகும்.
இந்த மலையின் சிறிய பகுதி ஒன்று தான் கடல் மட்டத்திற்கு மேலாக தெரிகின்றது. சரியாகச் சொல்லப் போனால் 4,207 மீட்டர் மட்டுமே தான் நம் கண்களால் பார்க்க முடியும். ஆனால், இந்த மலையின் அடி, கடலுக்குள் இருக்கும் காரணத்தால், அதனை கடல் அடியினில் இருந்து அளந்து பார்க்கும் போது அதன் முழுமையான உயரம் 10,205 மீட்டர் ஆகிவிடுகின்றது! எனவே மவுனா கேய் எவரெசுட்டு சிகரத்தை விட 1,357 மீட்டர் பெரிதாக இருக்கின்றது!