எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிட்டாக பறக்கும் சிட்டுக்குருவிகள் எங்கே போனது.?? - ஓர்...

சிட்டாக பறக்கும் சிட்டுக்குருவிகள் எங்கே போனது.?? - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதால் மலேரியா டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.

வீட்டில் வளக்கப்படும் செல்லப்பிராணிகளில் முக்கிய பங்கு சிட்டுக் குருவிகளுக்கு உண்டு. ஒரு காலத்தில் மனிதன் தான் தங்கும் உறைவிடமாக இருக்க ஓட்டு வீடுகளிலும், குடிசை வீடுகளிலும் வாழ்ந்து வந்தான்.

இங்குள்ள முற்றத்தில் வைக்கோல் தென்ணை நார் உள்ளிட்டவைகளை வைத்து கூடு கட்டி மனிதனோடு மனிதனாக வாழ்ந்து வந்தன சிட்டுக்குருவிகள். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியால் மாறிப்போனது குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும். உறுதியான கான்கிரீட் வீடுகளும் குளுகுளு சாதனத்துடன் மனிதனின் வாழ்க்கை தரம் மாறிவிட்டது.

தனக்கு இருப்பிட வசதியின்றியும், உணவின்றியும் மரணத்தை நோக்கி பயணமாகின லட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள். எல்லாவற்றையும் தாக்கு பிடித்து வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகளை இனி பாதுகாத்தால் மட்டுமே எஞ்சியவைகளையாவது காப்பாற்ற முடியும் என்பது சமுக ஆர்வலர்களின் கருத்து.

தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்களின் முட்டையில் இருந்து வெளிவரும் சிறு புழுவும் விவசாய நிலங்களில் பயிரிடப்படும் தானியங்களும் தான் அவற்றின் உணவு.

இன்றைய காலகட்டத்தில் குறைந்த காலத்தில் செலவு குறைவாகவும் அதிக லாபம் வேண்டி விவசாயிகள் இன்று பயிர்களின் மீது செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதனால் நமக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதனையே குருவி இனமும் சாப்பிடுவதால் அவைகள் அழிந்தே போய்விடுகின்றன.

இன்று திரும்பிய பக்கம் எல்லாம் செல்போன் டவர்களும், அதிக அலைகதிர்களை வெளியிடும் சாதனங்களும் மனித மிஷின் வாழ்க்கைக்கு இன்றியமைதாகி விட்டது.

நாம் சுவாசிக்கும் காற்று கூட மாசாக மாறிவிட்டது. எந்திர வாழ்கையை வாழும் மனிதனுக்கு எங்கே தெரியப்போகிறது மண்ணின் பெருமை.

இன்றைய சிறுவர்களிடம் சிட்டுக்குருவிகள் என்ற பறவையை பற்றி கேட்டால் பறவை இனத்தில் அப்படி ஒன்று இருக்கிறதா என்று கேட்கும் அளவிற்கு உள்ள நிலைதான் இன்று. நமது பண்டைய கால நாகரீகம் எல்லாம் தற்போது அழிந்து வருகின்றன என்பது அனைவராலும் மறுக்க முடியாத ஒன்று.

எஞ்சியுள்ள நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவி களையாவது பாதுகாக்க வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அவான் என்ற அமைப்பு முடிவெடுத்தது.

அதன்படி இன்று மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினமாகவும் அறிவித்தது. இதையடுத்து மனித வாழ்க்கையில் சிட்டுக்குருவிகளின் பங்கு நம் நாட்டினருக்கு புரிந்து விட்டது.

சிட்டுக்குருவிகள் மாநில பறவையாக . அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் தேதி சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இக்குருவிகளை ஒருசில இனத்தவர்கள் சுட்டு உண்கின்றனர். ஏனெனில் இவற்றின் கறி அவளவு சுவையாக இருக்குமாம். நம்மை நோய்களில் இருந்து காப்பாற்றும் இவற்றை நாமே அழிப்பதற்கு காரணமாகி விடக்கூடாது இனியாவது இந்த இனத்தை காப்பாற்ற முயற்ச்சி செய்வோமா...?

Dailyhunt

நாள் : 7-Apr-17, 4:07 pm

மேலே