தேசிய விருதுகள்! 64-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று...
தேசிய விருதுகள்!
64-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேர்வுக்குழு இவ்விருதுகளைத் தேர்வு செய்துள்ளது.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
சிறந்த திரைப்பட எழுத்தாளராக தமிழகத்தைச் சேர்ந்த தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த தமிழ்ப் படமாக ராஜூமுருகன் இயக்கிய ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த பாடலாசியருக்கான தேசிய விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மதுரை படத்தில் எந்தப் பக்கம் பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அனுபம் ராய்க்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
டங்கல் படத்தில் நடித்த சைரா வாசிமுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
சிறந்த சமூகநலன் படமாக பிங்க் தேர்வாகியுள்ளது.
24 படத்துக்கு சிறந்த புரொடக்ஷன் டிசைனுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த பாடகருக்கான தேசிய விருது ஜோக்கர் படத்தின் ஜாஸ்மின் பாடலைப் பாடிய சுந்தர அய்யருக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த சண்டைக்காட்சிக் கலைஞருக்கான விருது புலிமுருகன் படத்துக்காக பீட்டர் ஹெயினுக்குக் கிடைத்துள்ளது.

அமீர் கான்,சாக்ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியானது.
டங்கல் படத்தில் அமீர் கானின் மகளாக நடித்த ஸைரா வாசிமுக்குச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.