எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடுப்பு…!! ஒரு நாள் விடுப்பு வேண்டுமென்று கடிதம் எழுதி...

                    விடுப்பு…!!    



ஒரு நாள் விடுப்பு வேண்டுமென்று கடிதம் எழுதி என் தலைமை எழுத்தரிடம் கொடுத்தேன் அவர் கடிதம் வாங்கி படித்து விட்டு “ May be granted “ என்று எழுதி, தன் மேலதிகாரிக்கு அனுப்பினார். அவர் அக்கடிதத்தில் ” Not granted “ என்று எழுதி அனுப்பி விட்டார். மீண்டும் கடிதம் தலைமை எழுத்தரிடம் வந்தது. அவர் என்னை அழைத்து உங்கள் விடுமுறை Grant – ஆக வில்லை என்று சொன்னார். “ என்னுடைய விடுமுறை Grant ஆக வில்லையா? ” ஏன்? என்று கோபமாகக் கேட்டேன் அதற்காக சற்று நேரம் விவாதித்தேன். பிறகு நான் தொழிற்சங்கச் செயலரிடம் தெரிவித்தேன். அவரும் அதிகாரியிடம் விவாதித்து. ” அவரின் ஒரு நாள் விடுப்பு நிராகரிக்க முகாந்தரமே இல்லையே ” என்று பேசி, அந்த விடுமுறையை பெற்று தந்தார். அதில் வேடிக்கை என்னவென்றால் “ Not Granted “ என்று எழுதிய அதிகாரி, அக்கடிதத்தை வாங்கி “ Not “ என்பதை அழுத்தி விட்டு, ‘ Granted “ என்ற வார்த்தையை டிக் செய்து கொடுத்தார். விடுமுறை கேட்ட நான் வருத்தமாய் அறைகுறை மனதோடு வெளியில் வந்தேன். அரசாங்கம் ஊழியர்களுக்கு கொடுக்கின்ற விடுமுறையை கூட இப்படி நிராகரி்த்து, ஊழியர்களை  வஞ்சிக்கிறார்களே  என்று மிகவும் வருத்தப்பட்டேன். இப்படித்தான் இன்னும் கூட பல அலுவலகங்களில் நடைப் பெற்று வருகிறது என்பதை அறியலாம். இதுதான் இன்றைக்கும் தொழிலாளர்களின் அவல நிலை. குறிப்பு : இது பொய்யல்ல. என் பணிக் காலத்தில் எனக்கு நடந்த மறக்க முடியாத ஒரு உண்மை சம்பவம். அவரும் இருக்கிறார். நானும் இருக்கிறேன். இன்று இருவருமே ஒய்வு பெற்று விட்டோம். ந.க.துறைவன். *      

பதிவு : துறைவன்
நாள் : 1-May-17, 6:39 am

மேலே