காகிதம் ×××××××× என் காகிதத்தில் எழுதப்பட்டவைதான் புல்வெளிகளின் அழகான...
காகிதம்
××××××××
என் காகிதத்தில் எழுதப்பட்டவைதான்
புல்வெளிகளின் அழகான தருணங்களையும் தெறித்து ஓடும் புள்ளினங்களையும் ஒன்றாக ஒன்றுடன் மோதிச்செல்லும் மந்தைகளையும்
கிழித்து எறியக்கூடிய என் காகிதத்தில் எழுதப்பட்டவைதான்
மருகிக்கொண்டுவரும் எம் கலையும்
புதிப்பித்துக்கொண்டுவரும் மேல்நாட்டு கலையும் கிழித்து எறியப்படும் என் காகிதத்தில் எழுதப்பட்டவைதான்
பணத்துக்கும் மனிதனுக்கும் பிறந்ததுதான்
பேராசை எனும் மரணக்குழந்தை
முடிவில் இவை கிழித்து எறியப்படும் என் காகிதத்தில் எழுதப்பட்டவைதான்
காரணமே இல்லாமல் காதல் முளைக்கின்றது - பத்து வயது வந்தால்
பருவமழை காதல் தான்
தாலாட்டில் உறங்க வேண்டிய குழந்தைகள் தமிழ் சினிமா பாட்டில் உறங்கும் நிலையும் கிழித்து எறியப்படும் என் காகிதத்தில் எழுதப்பட்டவைதான்
எம் சரித்திரங்கள் அனைத்தும் கிழித்து எறியப்படும் காகிதத்தில் எழுதப்பட்டவைதான் - மீண்டும்
அவை கிழித்து எறியப்படும் காகிதத்தில் தான் எழுதப்படுகிறது....
றஜீத்.