எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்று திறக்கும் வான் கதவு ============================== வானம் பாத்த...

என்று திறக்கும் வான் கதவு
==============================

வானம் பாத்த கண்ணு ரெண்டும்
பூமி திரும்பவேணும்

பருவம் தவறாம வானப்பெண் பூக்கவேணும்

மோகம்  வரவேணும்
மேகம் கூடவேணும்

நெத்தியில ஒத்தச்சொட்டு
பட்டு தெரிக்கவேணும்

வண்ண மயிலாட வழியொன்னு பொறக்கவேணும்

சென்னையில தண்ணிப் பஞ்சம் தீர்த்து வைக்கவேணும்

காஞ்ச மண்ணு நனைய வேணும்
காடுகரை செழிக்க வேணும்

வெம்ம அடங்க வேணும்
மண்ணும் மனசும் குளிரவேணும்

வான் கதவ திறந்துவிட்டு இறைவா
நாங்க வாழவழி செய்ய வேணும்

நாள் : 20-May-17, 12:08 pm

மேலே