எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"உறவுகள் " உதிர்ந்து கிடக்கும் உதிரி பூக்களாய் பலர்...

                                                                                                         



"உறவுகள் "

உதிர்ந்து கிடக்கும் 
உதிரி பூக்களாய்  பலர் 
உதிரம் கொடுத்தும்
உதவிடுவர் சிலர் 

வஞ்ச புகழ்ச்சியில் 
வளைய வருவார்கள் பலர் 
நெஞ்சை மகிழ்ச்சியில் 
நிறைத்து விடுவார்கள் சிலர் 

நல்ல உறவுகள் 
மெல்ல வளரும் போது
கல்லெறிந்த குளம் போல்
கலங்கி விட கூடும் 

சொல்லும் சொல்லில் 
அன்பை  வைத்து 
வெல்லும் வித்தையை 
அறிந்து  கொண்டால் லாபம் 

அத்தனை மனதையும் 
அரவணைக்க முடியாதெனினும்
அணைத்து விடாமல் காப்பதும் 
அழுத்தமான ஒரு சவால் தான்

பதிவு : மாஷிதா
நாள் : 11-Jun-17, 5:42 pm

மேலே