மாஷிதா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மாஷிதா
இடம்:  திருவாரூர்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Nov-2016
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  1

என்னைப் பற்றி...

பலதையும் படிப்பவன் பண்டிதனாவான், என்பதை போல பல கவிதைகளை வாசித்து, தமிழ் மீதுள்ள ஆர்வத்தில் இன்று நானும் என் கவிதைகளை பதிவிடுகிறேன்

என் படைப்புகள்
மாஷிதா செய்திகள்
மாஷிதா - எண்ணம் (public)
05-May-2018 5:35 pm



"தோழி"

வெளிப்படையான பேச்சு 
சலிப்படையாத குணம் 
அகத்திரையில் ஏதும் மறைக்காமல் 
முகத்திற்கு முன் கூறிடுவாள் 

ஆறுதல் கூறி நம்மை 
ஆகாயம் கூட தொடவைப்பாள்
மாறுதல்கள் அத்தனையும் 
சகாயமாய் தந்திடுவாள் 

அடுத்தவர் எண்ணங்களை 
தடையில்லாமல் புரிந்துகொள்வாள் 
அறியாத மனங்களையும்
எடைப்போட்டு தெரிந்துகொள்வாள்

பாசம் காட்டுவதில் 
ஒளியாக அரும்பிடுவாள் 
வேஷம் போடுபவரை 
துளி கூட விரும்பமாட்டாள் 

தொடக்கத்தில் வேறுபாடு 
தொட்டுவிட்டு போனாலும் 
பழக்கத்தில் அவள் நட்பு 
வழக்கமானது எனக்கு 

தோழியே! என் நிழலாய் 
நீ தொடர்ந்து வர வேண்டும் 
வேலியாய் என் வாழ்வில் 
நீ படர்ந்திட வேண்டும்

மேலும்

மாஷிதா - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2018 9:47 pm

தொற்று வந்தது
தொட யோசித்தது உறவு
தொட்டு தூக்கியது நட்பு...

மேலும்

மிக்க நன்றி... 21-Mar-2018 11:45 am
மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்தைக்கண்டு உளமகிழ்ந்தேன்... 21-Mar-2018 11:44 am
சென்ற வாரத்தின் எழுத்து தளம் தங்கள் படைப்பை சிறந்த படைப்பாக தேர்ந்தடுத்தமைக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் நட்பு இலக்கியப் பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 20-Mar-2018 1:31 pm
அருமை 18-Mar-2018 11:57 pm
மாஷிதா - மாஷிதா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2016 9:22 am




"அப்பா"

காணாத அன்பை கண்டேன் 
கண்கள் எல்லாம் கலங்கி நின்றேன்
உறங்காத உறவு இதுதான் என்று 
உங்களால் உணர்ந்து
கொண்டேன் 

நாம் கைகள் கோர்த்து 
நடந்த நாட்களில் 
கடை வீதியெல்லாம் 
நடைவீதியாய் மாறக்கண்டேன்

எனக்காக ஏங்கிய 
நாட்களில் எல்லாம்
எதுவுமே புரியாமல் 
நானிருந்தேன் 

அனைத்தும் அறிந்து
அழுகிறேன் இன்று 
அணைக்க நீங்கள் 
இல்லையே "அப்பா"

மேலும்

மாஷிதா - மாஷிதா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2017 5:42 pm

                                                                                                         



"உறவுகள் "

உதிர்ந்து கிடக்கும் 
உதிரி பூக்களாய்  பலர் 
உதிரம் கொடுத்தும்
உதவிடுவர் சிலர் 

வஞ்ச புகழ்ச்சியில் 
வளைய வருவார்கள் பலர் 
நெஞ்சை மகிழ்ச்சியில் 
நிறைத்து விடுவார்கள் சிலர் 

நல்ல உறவுகள் 
மெல்ல வளரும் போது
கல்லெறிந்த குளம் போல்
கலங்கி விட கூடும் 

சொல்லும் சொல்லில் 
அன்பை  வைத்து 
வெல்லும் வித்தையை 
அறிந்து  கொண்டால் லாபம் 

அத்தனை மனதையும் 
அரவணைக்க முடியாதெனினும்
அணைத்து விடாமல் காப்பதும் 
அழுத்தமான ஒரு சவால் தான்

மேலும்

மாஷிதா - எண்ணம் (public)
11-Jun-2017 5:42 pm

                                                                                                         



"உறவுகள் "

உதிர்ந்து கிடக்கும் 
உதிரி பூக்களாய்  பலர் 
உதிரம் கொடுத்தும்
உதவிடுவர் சிலர் 

வஞ்ச புகழ்ச்சியில் 
வளைய வருவார்கள் பலர் 
நெஞ்சை மகிழ்ச்சியில் 
நிறைத்து விடுவார்கள் சிலர் 

நல்ல உறவுகள் 
மெல்ல வளரும் போது
கல்லெறிந்த குளம் போல்
கலங்கி விட கூடும் 

சொல்லும் சொல்லில் 
அன்பை  வைத்து 
வெல்லும் வித்தையை 
அறிந்து  கொண்டால் லாபம் 

அத்தனை மனதையும் 
அரவணைக்க முடியாதெனினும்
அணைத்து விடாமல் காப்பதும் 
அழுத்தமான ஒரு சவால் தான்

மேலும்

மாஷிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2016 7:22 pm

என்னவள் அவள் !
என்னில் நுழைந்தவள்
கண்ணில் பதிந்தவள்
காதல் பதித்தவள்

அன்பில் என்னை புதைத்தவள்
ஆறுதல் மொழி கதைத்தவள்
பண்பை கற்று கொடுத்தவள்
பகட்டை அகற்றி எடுத்தவள்

உருக்கமான தருணங்களில்
"உனக்காக நான்" என்று
உறுதியாக உரைத்தவள்
உயிராக உறைந்தவள்

தனலக்ஷ்மி பெயருக்கான
குணவதியாள் அவள்
குலம் விளங்க வந்த
குங்குமப்பூ அவள்

மனைவியாய் கரம் பிடித்தேன்-அவளை
மஞ்சத்தில் சிறை வைத்தேன்
முழுமதியாள் நீ என் சொப்பணம்
முழுதாய் நான் உனக்கு அர்ப்பணம்

மேலும்

அழகு 24-Nov-2016 12:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே