தனம் என் வரம்
என்னவள் அவள் !
என்னில் நுழைந்தவள்
கண்ணில் பதிந்தவள்
காதல் பதித்தவள்
அன்பில் என்னை புதைத்தவள்
ஆறுதல் மொழி கதைத்தவள்
பண்பை கற்று கொடுத்தவள்
பகட்டை அகற்றி எடுத்தவள்
உருக்கமான தருணங்களில்
"உனக்காக நான்" என்று
உறுதியாக உரைத்தவள்
உயிராக உறைந்தவள்
தனலக்ஷ்மி பெயருக்கான
குணவதியாள் அவள்
குலம் விளங்க வந்த
குங்குமப்பூ அவள்
மனைவியாய் கரம் பிடித்தேன்-அவளை
மஞ்சத்தில் சிறை வைத்தேன்
முழுமதியாள் நீ என் சொப்பணம்
முழுதாய் நான் உனக்கு அர்ப்பணம்