"அப்பா" காணாத அன்பை கண்டேன் கண்கள் எல்லாம் கலங்கி...
"அப்பா"
காணாத அன்பை கண்டேன்
கண்கள் எல்லாம் கலங்கி நின்றேன்
உறங்காத உறவு இதுதான் என்று
உங்களால் உணர்ந்து
கொண்டேன்
நாம் கைகள் கோர்த்து
நடந்த நாட்களில்
கடை வீதியெல்லாம்
நடைவீதியாய் மாறக்கண்டேன்
எனக்காக ஏங்கிய
நாட்களில் எல்லாம்
எதுவுமே புரியாமல்
நானிருந்தேன்
அனைத்தும் அறிந்து
அழுகிறேன் இன்று
அணைக்க நீங்கள்
இல்லையே "அப்பா"