பெண் விடுதலையை ஏட்டினில் எழுதினான் பாரதி உண்மை நிலை...
பெண் விடுதலையை ஏட்டினில்
எழுதினான் பாரதி
உண்மை நிலை என்ன
தன் மனைவியை
கொட்டடியில் கட்டி விட்டு
பாராளும் பெண்ணை
பாராட்டுகிறது ஆண்சமூகம்
காதலொருவனை கைபிடித்து
என்றான் பாரதி
வீணாய் போனவனாயினும்
வீட்டுக்காரன் என்பான்
வீதியிலே பெண்ணீயம்
பேசுவான் வீட்டுக்குள்ளே
குய்யோ முறையோ என்பான்
ஆண்மையின் அர்த்தம்
புரியாத ஆண்மகன்