எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கலங்கரை ஒளி கலங்கரை விளக்கத்தின் வரலாறு கலங்கரை விளக்கத்தின்...

கலங்கரை ஒளி

கலங்கரை விளக்கத்தின் வரலாறு

கலங்கரை விளக்கத்தின் முக்கியத்துவத்தை மெடிட்டேரியன் கடலில் பயணம் செய்த பழங்கால மாலுமிகள் உணர்ந்தார்கள். பழங்காலத்து எகிப்தியர்கள் விறகு மற்றும் நிலக்கரியை எரித்து அதன் மூலம் ஒளி உண்டாக்கி, அவ்வொளியையே கலங்கரை விளக்கமாக உபயோகப்படுத்தினர். முதன் முதலில் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தின் வாயிலில் உள்ள போராஸ் தீவில் கற்களால் உருவாக்கிய கலங்கரை விளக்கம் கி.மு. 285 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. போராஸ் கலங்கரை விளக்கம் உலக ஏழு அதியங்களில் ஒன்றாக விளங்கியது. இக்கலங்கரை விளக்கத்தின் அடிப்பாகம் 100 சதுர அடி பரப்பளவிலும், 400 அடி உயரத்திலும் கட்டப்பட்டதாகும். இக்கோபுரத்தின் உச்சியில் விறகுகளால் தீமூட்டி ஒளிவீசச் செய்தனர். இக்கலங்கரை விளக்கம் பூமி அதிர்ச்சியின் காரணமாக அழிந்து போய்விட்டது. இவ்வகையான தீமூட்டி ஒளி கொடுக்கும் கலங்கரை விளக்கங்கள் 18-ஆம் நூற்றாண்டு வரை பழக்கத்திலிருந்தது. முதன் முதலாக வட அமெரிக்காவில் உள்ள போஸ்டன் என்ற நகரில் விளக்குப் பொறுத்தப்பட்ட கலங்கரை விளக்கம் 1716 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பின்னர் பல நாடுகளில் கலங்கரை விளக்கங்கள் கட்டப்பட்டு மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கு உதவியாக செயல்படுகின்றன. நம்முடைய நாட்டில் குறிப்பாக தமிழக கடலோரங்களில் சென்னை, மகாபலிபுரம், பாண்டிச்சேரி, கடலூர், காரைக்கால், நாகப்பட்டிணம், கலிமர் முனை, பாம்பன், கீழக்கரை, தூத்துக்குடி, மணப்பாடு, கன்னியாகுமரி மற்றும் முட்டம் போன்ற இடங்களில் கலங்கரை விளக்கங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலான கலங்கரை விளக்கங்களின் விளக்கு ஒளி வானிலை தெளிவாக காணப்படும் இரவில் 20 அல்லது அதற்கும் மேற்பட்ட மைல்களுக்குபால் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 30-Aug-17, 1:02 pm

மேலே