இதயம் என்ன செய்யும்? எண்ணங்கள் விதைக்கப் படுகின்ற விளைநிலம்தான்...
இதயம் என்ன செய்யும்?
எண்ணங்கள் விதைக்கப் படுகின்ற
விளைநிலம்தான் இதயம் - அதில்
அன்பு விதைக்க்கப் பட்டால்
வாழ்க்கை அழகாய் இருக்கும்.
வீரம் விதைக்கப்பட்டால்
வாழ்வில் வெற்றிகள் குவியும்.
நட்பு விதைக்கப்பட்டால்
வாழ்வில் நன்மைகள் தொடரும்.
பகைமை விதைக்கப்பட்டால்
வாழ்க்கை பட்டுபோகும்.
வெறுப்பு விதைக்கப்பட்டால்
வாழ்க்கை கருப்பாய் மாறும்.
இதயம்,
ரத்தமும் சதையும் அல்ல.
கனவுகளின் களஞ்சியம்.
பற்றும் பாசமும் நிறைந்த
ஆசைகளின் அடிநாதம்.
இதயத்தில் இனிமை சேருங்கள்
அதற்கும் சிறகு முளைக்கும்.
உயர்வாய் கனவு காணுங்கள்
வானில் அது சிறகடித்துப் பறக்கும்.
மாமுகி.