எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

😍என் தேடல் எனக்காய் பிறந்தவனே... எங்கிருக்கிறாய்? என் இன்ப...

😍என் தேடல் 

எனக்காய் பிறந்தவனே... எங்கிருக்கிறாய்?
என் இன்ப துன்பத்தில் பங்கு கொள்ள போகவிருக்கும் எனக்குச் சொந்தமானவனே ...
எங்கிருக்கிறாய்?
என் உரிமைகளை மீட்டுத் தரப் போகிறவனே...
எங்கிருக்கிறாய்?
 நீ இன்றி நான் இல்லை என்றுச் சொல்லப் போகிறவனே...
எங்கிருக்கிறாய்?
எனக்காக வாழ்க்கையை வாழப் போகிறவனே...
எங்கிருக்கிறாய்?
என் குறும்புகளை ரசிக்கப் போகிறவனே...
எங்கிருக்கிறாய்?
உன் தோளில் சாய இடமளிக்கப் போகிறவனே...
எங்கிருக்கிறாய்? என் அன்பை முழுமையாகப் பெறப் போகிறவனே...
எங்கிருக்கிறாய்? 
குழந்தையின் குண அதிசயங்கள் மாறாதவளைக் காணாமல்...
எங்கிருக்கிறாய்? 
என் தேடலின் விவரம் அறிந்து என்னை வந்துச் சேருவாய் எனக்கு சொந்தமானவனே.......😍😉😄

பதிவு : Arivukkodi
நாள் : 10-Sep-17, 10:03 am

மேலே