b��L�& மேலாண்மை ஏற்றுமதி- இறக்குமதி>பொது வேர்ஹௌசிங் " v:shapes="_x0000_i1025">...
b��L�&
மேலாண்மை
உலகமே ஒரு ப்ரம்மாண்டமான கிராமம் எனப்படும் அளவுக்கு நாடொறும் நாடுகள், நகரங்கள், துறைகள், மற்றும் சந்தைகள் ஆகியவை சுருங்கி வருகின்றன. இத்தகைய அபரிமிதமான வளர்ச்சிக்கு நடுவே - இளமையான அதே நேரம் இயல்பு வழி பொருளாதார முன்னேற்றம் கண்டு வரும் நமது நாடு, தலை நிமிர்ந்து நிற்கின்ற நேரமும் இதுவே. லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் போக்குவரத்து மற்றும் அதனை சார்ந்த துறை கல்வி மீது இளைய சமுதாயம் மிக பெரிய அளவிற்கு ஆர்வம் காட்டி வருவது கண்கூடு. லாஜிஸ்டிக்ஸ் கல்வி புகட்டுவதில் நமது நாட்டு சர்வகலாசாலைகள் தவிர போலந்து மற்றும் பிரான்ஸ் நாடு கல்வி நிறுவனங்கள் பெரும் பெயர் பெற்று வருகின்றன. சுமார் ஐந்து செமஸ்டர் கால அளவைக்கொண்டு எம் எஸ்(மாஸ்டர் ஆப் சயின்ஸ் ) படிப்பின் இடையே இரண்டு நாடுகளில் இன்டெர்ன் வசதியையும் இத்தகைய வெளிநாட்டு சர்வ கலாசாலைகள் ஏற்படுத்தியுள்ளன. எம் எஸ் கோர்ஸ் தவிர மேலும் உயர் ஆய்வுப் படிப்பான பிஹெச். டி படிப்பையும் நடத்தி வருகிறது பிரான்ஸ் நாட்டின் லயான்ஸ் சர்வகலாசாலை. இத்துறை முன்னேற்றத்திற்கான பல வழிகளை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் பெருத்த அளவில் நாம் கண்கூடாக பார்க்க போகிறோம். போக்குவரத்து மற்றும் சாதனங்களை கையாளவல்ல செயல்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ள இத்துறை ஏற்கனவே 15 சதவிகிதம் வளர்ந்துள்ளது இதன் உப துறையான ரிடைல் ( ரெடைல்) எனப்படும் உதிரி வாணிபத்தில், வேலை வாய்ப்பு பன்னிரண்டு சதவிகிதம் அதிகரித்துள்ளது. போக்குவரத்து மற்றும் வேர் ஹௌசிங் மட்டுமே இருபது சதவிகித வளர்ச்சி கண்டு, சுமார் 8,53,000 புது வேலை வாய்ப்புக்களை உருவாக்கப் போகிறது. கூட்டி கழித்து பார்த்தால், உயர் மட்ட அளவிலான லாஜிஸ்டிக்ஸ் நிர்வாகவியலில் மட்டுமே குறைந்த பட்சம் ஏழு சதவிகித வளர்ச்சியை குறுகிய காலத்தில் எதிர்பார்க்கலாம். தானியங்கி (automation) சூழல்கள் மற்றும் வேர்ஹௌசிங் கையாளும் விதங்களுக்கு ஏற்ற வகையில், தொழில் நுட்ப அம்சங்களை இணைத்து செயல்படும் வகையிலும் சர்வ கலாசாலைகளும் கல்லூரி களங்களும் பணியாளர் பயிற்சி முறைகளை மேம்படுத்தும் வண்ணம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.