"அவளாகிய நான்" இன்றய காலகட்டத்தில் கொலைகாரனயும்,இனவெறி மதவெறியை தூண்டுபவனையும்,கொள்ளைகாரனயும்,...
"அவளாகிய நான்"
இன்றய காலகட்டத்தில் கொலைகாரனயும்,இனவெறி மதவெறியை தூண்டுபவனையும்,கொள்ளைகாரனயும், குழந்தைகளை கூட விடாமல் வன்கொடுமைக்கு ஆளாக்குபவர்களையும் கூட இந்த சமுதாயம் ஏற்று கொள்கிறது. ஆனால் பிறப்பால் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து பருவ வயதில் தன் பாலினத்தை மாற்றும் திருநங்கை மற்றும் திருநம்பிகளை ஏற்க மறுக்கின்றது. 2014 ஆண்டின் கணக்கின் படி இந்தியாவில் மூன்றாம் பாலினத்தாரின் எண்ணிக்கை சுமார் 4.7 லட்சம். இதில் இந்த சமூதாயத்தை எதிர்த்து போராடி , அவமானங்களை எதிர் கொண்டு பல வலிகளை அனுபவித்து சாதித்து கொண்டிருப்பவர்கள் மிக குறைவே. தாய் தந்தையிடமிருந்து வரும் குரோமோசோமின் குறைபாடே இவர்களின் இந்த நிலைக்கு காரணம். இப்படி இருக்க இவர்களை முதலில்வெறுத்து ஒதுக்குபவர்கள் அவர்களின் பெற்றோர்களே. மூன்றாம் பாலினத்தவர்களை இந்த சமூகம் முழுவதுமாக ஏற்க வேண்டும். இவர்கள் தாங்கள் பிறந்த அடையாளத்தை தங்களின் உயிரை பணயம் வைத்து அழித்தது கை தட்டி காசு கேட்கவும் பாலியல் தொழிலுக்கும அல்ல, தங்களின் புதிய அடையாளத்தை நிலைநாட்ட..