எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காவியங்களுக்குள் கலவரம். ************* உன்னைப்பற்றி கவிதை எழுத இலக்கனம்...

காவியங்களுக்குள் கலவரம்.
*************
உன்னைப்பற்றி கவிதை எழுத
இலக்கனம் தேடினேன் !!!

எதிரிகளான எதுகை,மோனையும்
கை கோர்த்து வந்தது.....
அடுத்த நிலை எழுத   "இரட்டைகிழவி"யை அழைத்தேன்
சேர்ந்தே இருக்கும் இருவரும்  எதிர் அணிகளாய் மாறின உன் அழகை பற்றி புறம் பேச.....உன்மையான கிழவிகள் போல.....................
வேறு வழியின்றி உன்னை ஒப்பிட நிலவை அழைத்தேன்...நிலவுடன் ஏற்கனவே ஒப்பிட்டதால் பழைய பகையில் வர மறுத்தது........
இறுதியாக என் அறிவுக்கேற்ப எழுத
பேனா எடுத்தேன் உன் பெயரை எழுதுவதற்குள் மையை சிந்தி விட்டது ஜொல்லாக......
இதை தான்டியும் எழுத நினைத்தால் ஏதோ ஓர் காகிதம் எனக்கு பதிலாக உன்னை தாங்குவதை நான் விரும்பவில்லை..............
உன்னை பற்றி கவிதை எழுத முடியாத கவலையுடன்...........

---ஆசி----

பதிவு : ஆசி
நாள் : 19-Sep-17, 11:52 pm

மேலே