ஆசி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ஆசி
இடம்:  இராமேஸ்வரம்
பிறந்த தேதி :  22-Mar-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Sep-2017
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  2

என்னைப் பற்றி...

சந்தோசத்தையும்,சோகத்தையும் எழுத்து மூலம் பகிர்ந்து கொள்பவன்

என் படைப்புகள்
ஆசி செய்திகள்
ஆசி - எண்ணம் (public)
25-Aug-2020 9:58 pm

நடு நெற்றி வகிடெடுத்து,
முகத்தில் ஈரம் அது துடைத்து,
முட்டை கண்ணுக்கு மை கொடுத்து, கன்னம் தொடும் கம்மலிட்டு, உதட்டுச்சாயம் அது தவிர்த்து, கரங்களுக்கு கண்ணாடி வளையல் கோர்த்து,
கொலுசு  இட குனிந்தவள் கொசுவம் கலைந்து  மடிப்பு விழுந்த இடை மயக்க அதில் முன்னிரவு சண்டையை நான் மறக்க,  நான் பார்த்ததை கண்டு அவள் விழி உயர்த்த, அந்த நேரம் தொலைக்காட்சியில் "உன் கண்ணு அழகுதான் கன்னட நாட்டை எழுதி தரட்டுமா என பாடல் ஒலிக்க" அதை புன்முறுவலுடன்  நான் முணுமுணுக்க,  திட்ட வாய் எடுத்த நறுமுகை அவளது திட்டத்தை முறியடித்தது திருஷ்டிப் பொட்டாக நான் அவள் கன்னத்தில் இட்ட முத்தம்.

-அபி

மேலும்

உணர்வுப்பூர்வமான கவிதை வரிகள். 27-Aug-2020 12:42 pm
ஆசி - தீப்சந்தினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2019 9:58 am

திருமணமான பெண்ணிற்கு காதல் வருமா ?

மேலும்

அட கடவுளே.... அடுத்தவன் மீதும் காதல் வருகிறதே? 13-Feb-2020 11:44 pm
ஏன் வராது? 13-Feb-2020 11:41 pm
வர இயலாது என்று யாராலும் கூறிவிட முடியாது. 12-Sep-2019 9:53 pm
கட்டாயம் வரும், சிலருக்கு தங்களின் கணவர் மேல் காதல் வரும், சிலருக்கு தங்களின் அன்பை புரிந்து தன்மேல் அன்பு செலுத்தும் நபரிடம் காதல் வரும் , சரியான வாழ்க்கை புரிதல் இல்லாத நபர்களுக்கு உடல் அழகையும் போலியான புகழ்ச்சியும் உள்ளவர்கள் மேல் காதல் வரும்; முதலானது சிறப்பானது, அடுத்தது அடுத்ததாய் இருப்பதே நலமானது; இறுதியானது கொள்ளாமல் இருப்பது எல்லோருக்கும் நலமானது. இது புரிந்தால் வாழ்க்கை நலமாக இருக்கும் 03-Sep-2019 1:46 pm
ஆசி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2018 12:21 am

கோடை காலத்திலும் குளுமை
உன் குரலால்
நிலவும் பொறாமையில் பொங்குகிறது
உன்னுடன் அதனை ஒப்பிடுவதால்...
பிடிவாதம் நீ பிடிக்கும் போது
உனக்கு பிடித்த வார்த்தை கூறி
என்னுள் சிறை பிடிப்பேனடி ...

- ஆசி

மேலும்

ஆசி - எண்ணம் (public)
22-Jun-2018 12:04 am

ஒரு தலை காதல் …


முடிவுரை தெரிந்தும் 
தெளிவுரை எழுதுவது …

- ஆசி 

மேலும்

ஆசி - ஆசி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2018 11:43 pm

உப்பு கல்லாய் நீ இரு....

உணவு பொருட்களில் உப்பு மட்டுமே விலை குறைவு,அதே போல் நீ மற்றவர் கண்களுக்கு மதிப்பற்றவர்களாய் தெரியலாம்...
ஆனால் உப்பின்றி உணவில்லை!!
அதே போல் நீ இன்றி அங்கு உணர்வில்லை என நீ உணர்த்து...

மேலும்

ஆசி - எண்ணம் (public)
06-Jun-2018 11:43 pm

உப்பு கல்லாய் நீ இரு....

உணவு பொருட்களில் உப்பு மட்டுமே விலை குறைவு,அதே போல் நீ மற்றவர் கண்களுக்கு மதிப்பற்றவர்களாய் தெரியலாம்...
ஆனால் உப்பின்றி உணவில்லை!!
அதே போல் நீ இன்றி அங்கு உணர்வில்லை என நீ உணர்த்து...

மேலும்

ஆசி - ரஃபாத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2017 9:42 am

அன்று
காதல் எண்ணங்கள் எதுவுமில்லை
இருந்தும்
கன்னங்கள் கவனிக்க மறக்கவில்லை
அதில்
புன்னகை சிறு குழி வெட்ட
நான்
தடுமாறி விழ தெரிந்தேன்...

என்னை கடந்து செல்லும் அக்கணம்
கருவிழி ஒதுக்கி, பார்வை வீசி
ஒரு பாதி இதயம் உறயச் செய்தாய்...

உன்னை அணுக மனம் துடித்தது,
அடம் பிடித்தது
ஆண் கர்வம் அனுமதி மறுத்தது,
வீராப்பு பேசியது...

இருக்கை ஓரம் நானிருக்க
என்னருகே வந்து நின்றாய்
"மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்"
வெறும் கவிதை வரிகள் என்றிருந்தேன்
சத்தியமாய் பறந்தது அன்று.

அருகில் இருந்தும்,
அன்பாய் பேச
அலைபேசியே விதி...

கண் பேசும் வித்தையெல்லாம்
தானாய் கற்றது மதி...

காகிதம்

மேலும்

பள்ளி நினனைவுகளில் பல பசுமரத்தானி போல..... எழுத்துகள் அனைத்தும் பல பார்வையை கொண்டு வந்துள்ளது வாழ்த்துகள் சகோ தொடர்ந்து எழுதலாமே 20-Sep-2017 12:25 am
நன்றி :) 30-Aug-2017 1:15 pm
மனதில் நிலைத்த பெண் மரணம் வரை அழகான நினைவுகளில் கருத்தரிக்கிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 12:59 pm
ஆசி - ஆசி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2017 11:52 pm

காவியங்களுக்குள் கலவரம்.
*************
உன்னைப்பற்றி கவிதை எழுத
இலக்கனம் தேடினேன் !!!

எதிரிகளான எதுகை,மோனையும்
கை கோர்த்து வந்தது.....
அடுத்த நிலை எழுத   "இரட்டைகிழவி"யை அழைத்தேன்
சேர்ந்தே இருக்கும் இருவரும்  எதிர் அணிகளாய் மாறின உன் அழகை பற்றி புறம் பேச.....உன்மையான கிழவிகள் போல.....................
வேறு வழியின்றி உன்னை ஒப்பிட நிலவை அழைத்தேன்...நிலவுடன் ஏற்கனவே ஒப்பிட்டதால் பழைய பகையில் வர மறுத்தது........
இறுதியாக என் அறிவுக்கேற்ப எழுத
பேனா எடுத்தேன் உன் பெயரை எழுதுவதற்குள் மையை சிந்தி விட்டது ஜொல்லாக......
இதை தான்டியும் எழுத நினைத்தால் ஏதோ ஓர் காகிதம் எனக்கு பதிலாக உன்னை தாங்குவதை நான் விரும்பவில்லை..............
உன்னை பற்றி கவிதை எழுத முடியாத கவலையுடன்...........

---ஆசி----

மேலும்

வாழ்த்துகள் சகோதரா 20-Sep-2017 12:17 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
kabi prakash

kabi prakash

madurai
ரஃபாத்

ரஃபாத்

இராமேஸ்வரம்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ரஃபாத்

ரஃபாத்

இராமேஸ்வரம்
kabi prakash

kabi prakash

madurai

இவரை பின்தொடர்பவர்கள் (4)

ரஃபாத்

ரஃபாத்

இராமேஸ்வரம்
kabi prakash

kabi prakash

madurai

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே