எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நடு நெற்றி வகிடெடுத்து, முகத்தில் ஈரம் அது துடைத்து,...

நடு நெற்றி வகிடெடுத்து,
முகத்தில் ஈரம் அது துடைத்து,
முட்டை கண்ணுக்கு மை கொடுத்து, கன்னம் தொடும் கம்மலிட்டு, உதட்டுச்சாயம் அது தவிர்த்து, கரங்களுக்கு கண்ணாடி வளையல் கோர்த்து,
கொலுசு  இட குனிந்தவள் கொசுவம் கலைந்து  மடிப்பு விழுந்த இடை மயக்க அதில் முன்னிரவு சண்டையை நான் மறக்க,  நான் பார்த்ததை கண்டு அவள் விழி உயர்த்த, அந்த நேரம் தொலைக்காட்சியில் "உன் கண்ணு அழகுதான் கன்னட நாட்டை எழுதி தரட்டுமா என பாடல் ஒலிக்க" அதை புன்முறுவலுடன்  நான் முணுமுணுக்க,  திட்ட வாய் எடுத்த நறுமுகை அவளது திட்டத்தை முறியடித்தது திருஷ்டிப் பொட்டாக நான் அவள் கன்னத்தில் இட்ட முத்தம்.

-அபி

பதிவு : ஆசி
நாள் : 25-Aug-20, 9:58 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே