நவராத்திரி ஏழாம் நாள் வழிபாட்டு முறை 7ம்நாள் அன்னையை...
நவராத்திரி ஏழாம் நாள் வழிபாட்டு முறை
7ம்நாள் அன்னையை மகா லட்சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டா யுதம், சக்தி ஆயுதம், வஜ்ரா யுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்ட லம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களை யும் தருபவள் அன்னை யாகும். இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவ சக்தி கோலத்தில் மக்களி ற்கு அருள் பாலிப்பார்கள்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க் கண்டுச் சாதம்.