எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாட்டுப்புற கலை வளர்ந்தால் தமிழ் தானாக வளரும் தமிழர்களின்...

நாட்டுப்புற கலை வளர்ந்தால் தமிழ் தானாக வளரும்

தமிழர்களின் முக்கிய கலையான நாட்டுப்புற கலை அழியாமல் பாதுகாப்பதின் மூலம், தமிழர்களின் கலாச்சாரம் அழியாமல் காப்பாற்ற முடியும். சினிமா நடிகர்களை அழைப்பதைப் போல் நாட் டுப்புற கலைஞர்களை அழைத்து விழா நடத்த வெளிநாடுவாழ் இந்தியர்கள் முன்வர வேண் டும்,'' என, நாட்டுப்புற கலை தொடர்பாக கட்டுரைகள் எழுதி வரும் சின்னப்பொண்ணு கூறினார்.

தமிழ் செம்மொழி மாநாட்டின் மைய கருத்து பாடலில் "செம்மொழி, செம்மொழி' என இரு கைகளை நீட்டி குரல் கொடுக்கும் இவரை எளிதில் மறக்க முடியாது. "தமிழ் வாழ, தமிழர்களின் கலைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும்' என்கிறார், சின்னப்பொண்ணு. நாட்டுப்புற கலைகள் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதி வரும் இவர், சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் சூத்திரதாரி.

கிராமங்களில் மட்டுமே பார்த்து வந்த நாட்டுப் புற கலைகள் அனைவராலும் மறக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், சென்னையில் நடந்த "சங்கமம்' நிகழ்ச்சி, அக்கலைகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. இந்தியா வரும் வெளிநாட்டு இந்தியர்கள் நாட்டுப்புற கலைகளை ரசிக்கின்றனர். ரசித்தால் மட்டும் போதாது. நாட்டுப்புற கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.  இக்கலைகளை நம்பி வாழும் கலைஞர்கள் வேறு தொழிலுக்கு போகாமல் கலையை மேலும் சிறப்பாக வளர்க்க பாடுபடுவர். தமிழ் மொழி வளர, முதலில் தமிழர் கலைகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும். கலைகள் வளர்ந்தால் பண்பாடு, கலாச்சாரம் வளரும். பண்பாடும் கலாச்சாரமும் வளர்ந்தால், அதை சார்ந்திருக்கும் மொழியும் வளரும். செம்மொழி வளர்ச்சி பெற, அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 3-Oct-17, 3:46 pm

மேலே