எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

https://youtu.be/ARCLCy0Rk5o கவிததையை வீடியயோ வடிவில் ரசனையுடன் மாற்றப்பட்டுள்ளது ஒருதலை...

https://youtu.be/ARCLCy0Rk5o

  கவிததையை வீடியயோ வடிவில் ரசனையுடன் மாற்றப்பட்டுள்ளது 

ஒருதலை காதல் ஏக்கம்:

உள்ளம் நினைக்கின்றதா 
எண்ணம் சிந்துகின்றதா 
பார்க்க துடிக்கின்றதா 
புரியாத 
இந்த நிலை தான் காதலா.. 

வெட்டிய எறும்பின் தலை போல 
உன்னிடம் சேர துடிக்கிறது 
இந்த மனசு 

பாவம் இந்த மனசு 

இப்பொழுது தான் 
உன்னை பார்த்து பழகி 
புதிதாக பூத்த பூவை போல 
மனமகிழ்கிறது..

இந்த மனதிற்கு  காதலால் வந்த 
ஏக்கம் புதிது 
கீதம் புதிது 
சிரிப்பு புதிது 
அழுகை புதிது 
தவிப்பு புதிது 

இறைவன் அனுமதி இல்லாமல் 
ஒரு நொடி கூட அவரை 
நினைக்க முடியாது
அதுபோல் 
உன் அனுமதி இல்லாமல் 
உன்னை எப்படி 
நினைக்காமல் இருக்க முடியும் 

பேசி பழகும் தோழியாய் 
இருந்தாலும் 
என்றும் என் கனவில் 
வாழும் காதலி நீ..

ஊரே உறங்கிக் கொண்டிருக்க 
நான் மட்டும் விழித்திருக்க 
ஏன் இந்த தண்டனை 

உன் விழிகளில் உறுளுகின்ற 
இரண்டு காதல் விதை 
என் விழி வழி கலந்து 
என்னை ஏதோ செய்கின்றன..

ஏக்கம் ஒருவனை என்ன செய்துவிடும்??
பசியிருந்தும் பட்டினி கிடக்கும்
அத்வைதம் ஏற்கப் பழகும் 
உறவுகள் இருந்தும் விலகி நடக்கும் 
பனியிலும் உடல் வெப்பம் அதிகரிக்கும் 
தனிமையிலும் காதல் கொள்ளும் 
வார்த்தைகள் இருந்தும் 
மௌனம் பழகும் 
உறக்கத்தை விரட்டியடிக்கும் 
மொத்தத்தில் உன்னிடம் 
சேர துடிக்கும் 


இத்தனை உணர்வுகள் கொண்டதா
 இந்த காதல்???

உன் நினைவுகளை அதிகரிக்கும் 
வல்லமை கொண்டவளே 
குறைக்க வழியுண்டா???

முடியவில்லை 

பாவம் இந்த மனசு 
எப்படி தன் காதலை சொல்லும் 

முடிவாக 
ஏங்கும் மனதுக்கு 
இந்த அறிவு சொல்வதென்னவோ 
காதலிக்கா ஏங்காதே 
காதலுக்காக ஏங்கு 
தைரியம் வேண்டுமென ஏங்கு 

ஏட்டுச் சுரைக்காய் 
கறிக்கு உதவாது 
உன் ஒருதலை காதல் ஏக்கம் 
என்றும் காதலுக்கு உதவாது...

பதிவு : Kumar Kalpana
நாள் : 4-Oct-17, 2:16 pm

மேலே