எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பூமியை பாதுகாக்க வழிகள் உலகம் முழுவதும் ஏப்ரல் 22ஆம்...

பூமியை பாதுகாக்க வழிகள்

உலகம் முழுவதும் ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று பூமி தினத்தில் இளம் தலைமுறையினருக்கு புவியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் வழிகளை நாம் கற்றுக் கொடுப்போம். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு இதவே நியூட்டன் சொல்லும் 3வது விதி. இதில் இயற்கைக்கும் பாரபட்சம் இல்லை, நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் பூமியை நாம் பாதுகாக்கததன் விளைவாகவே சுனாமி, சென்னையையே மூழ்கடித்த வெள்ளம், 3 மாவட்டத்தை புரட்டிப்போட்ட வர்தா புயல், 142 வருடத்தில் இல்லாத வறட்சி என பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. எனவே, சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

உலக பூமி தினம் இந்த ஆண்டு ‘சுற்றுச்சூழல் மற்றும் பருவகால நிலை பற்றிய கல்வியறிவு' என்ற கருத்துருவில் உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் பூமியின் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே பூமி தினமாகும். அமெரிக்க செனட் உறுப்பினர் கெலார்ட் நெல்சன் 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி இந்த பூமி தினத்தை உருவாக்கினார். அன்று முதல் இது தொடர்ந்து அமெரிக்காவில் தவறாமல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்போது உலகெங்கும் இது பிரபலமாகியுள்ளது.

பூமியின் முதல் எதிரி இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதனால் வாழமுடியாது. இதை இன்றைய குழந்தைகளிடம் எடுத்து செல்ல வேண்டும். பூமியின் முதல் எதிரி யார்? என்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது மனிதன்தான்.

பெரிய தீமை இயற்கைக்கு எதிரான எந்த ஒரு கண்டு பிடிப்புகளும் மனிதர்களுக்கு தற்காலிக தீர்வை மட்டுமே தரக் கூடியது. மாறாக நிரந்தர பெரிய தீமைகளை பூமிக்கு அவை ஏற்படுத்துகின்றன. பிளாஸ்டிக் மற்றும் மக்காத குப்பைகளின் பயன்பாட்டுக்குத் தடை போட்டாலே பூமியை நாம் பாதுகாக்கலாம், ஆனால் நவீனமயம், சோம்பேறித் தனத்தின் காரணமாக பிளாஸ்டிக்கிற்கு நாம் அடிமையாகியுள்ளோம்.

புவியை பாதுகாப்போம் பிளாஸ்டிக் அடிமைத்தனத்தை ஒழிப்பதோடு அடுத்த தலைமுறைக்கு இதை பயிற்றுவித்தால் மட்டுமே 9 கோள்களில் ஒன்றாக இருக்கும் பூமியில் வரும் காலத்தில் ஒரு ஆள் கூடாத வாழ முடியாத நிலையை மாற்ற முடியும்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 26-Oct-17, 12:01 pm

மேலே