நரி சுட்ட வடை பத்து மாதம் சுமந்து எடுத்த...
நரி சுட்ட வடை
பத்து மாதம் சுமந்து எடுத்த தாயை ஒருவன் தன்னிடம் வைத்துக்கொள்ளாமல் தனியாக அனுப்பிவிட்டான் . அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வயிற்று பசியை போக்குவதற்காக வடை விற்று வந்த வயதான பாட்டி என்றும் கூறலாம். அன்று விற்ற வடையின் பணம் தான் மறுநாளிற்கான உணவாகும். பாட்டின் கைமணம் மூக்கில் சுவாசித்தால் போதும் நாக்கில் எச்சில் ஊருமளவில் இருக்கும். ஊரில் கடை வைக்க ஒருவரும் இடம் தரவில்லை. அதனால் காட்டின் பக்கத்தில் வடை சுட ஆரம்பித்தார். இந்த வடையின் வாசம் பயணம் செல்லும் அனைவரும் கட்டி இழுக்கும். வாகனத்தில் சென்றால் நின்று வாங்கிக்கொண்டு தான் செல்வார்கள். பாட்டியின் கைமணம் மனிதர்களையும் அல்ல காட்டில் மிருகங்களையும் அடிமையாக்கிவிட்டது .துயரத்தில் இருந்த அனைத்தும் மிருங்கங்களும் வடை கிடைக்காத என்று ஏங்கிகிடைந்தது. பாட்டியின் பக்கத்தில் இரண்டு கண்கள் புதரில் தெரிந்தது. தகுந்த நேரத்திற்காக காத்து இருந்தது. நேரமும் கிடைத்தது தட்டில் இருக்கும் பத்து வடைகளும் திருடி சென்றது. பாட்டியும் கவனிக்கவில்லை. திருடி சென்ற மிருகம் வேற யாருமில்லை. திருட்டிற்கு புகழ் பெற்ற குள்ளநரி தான்.
அப்போதுதான் நரியின் நாடகம் தொடங்கியது.களிமண்ணை எடுத்து வடை போன்று வட்டமாக செய்து பத்து பைகளில் நிரப்பி வைத்தது.குள்ளநரி தன் முகங்களிழும் உடல் முழுவத்திலும் சிறிய அளவில் கரி பூசிக்கொண்டது வியபாரத்துக்கு தயாராகியது. நடுக்காட்டில் வடையை சத்தமாக விற்க ஆரம்பித்து.பாட்டியின் கைமணம் சுற்றிலும் உள்ள அனைத்து விலங்குகளும் வரவைத்தது. நரிக்கோ இன்று பனமழையா இல்லை அடி உதையா என்று தெரியவில்லை.வாசனையில் மயங்கிய அனைத்து மிருகமும் அமைதியாக நிற்க அதில் ஒன்று மட்டும் குரல் எழுப்ப அது வேற யாருமில்லை காக்கா தான்.இந்த வடையின் வாசம் என் சுவாசத்தை நிறுத்துகிறது என்று குரியது.
பத்து வடையை பாதியாக பிரித்து சுற்றிலும் உள்ள அணைத்தது விலங்கிற்கும் கொடுத்தது.நன்றாக இருந்தால் இந்த ஏழைக்கு உங்களால் ஆனா ஏதோ வைரமோ , தங்கமோ கொடுங்க என்று கூறியது குள்ளநரி. களிமண் பைகளை விற்பதற்காக தந்திரமாக கூறியது நரி. இப்போது பைகளை திறக்க வேண்டாம் வடைகள் சூடாக உள்ளது சிறிது நேரம் கழித்து திறக்கவும் என்று கூறியது.அதை கேட்டு அனைத்து விலங்குகளும் சென்றபோது காக்கா மட்டும் ஒரு வேலை பாட்டியின் வடை வாசம் போல இருக்கு அவசரமாக ஒரு வடையாவது சாப்பிடலாம் என்று திறந்து பார்த்தல் கையில் இருந்த பையை திறந்தால் அதில் வட்ட வடிவில் களிமண் தான் உள்ளது. ஆத்திரமடைந்த காக்கா அனைத்து விலங்கிடமும் சத்தமாக கூறிவிட்டது. நன்றாக இருந்த வடையால் அதன் கையிலும் சரி பையிலும் சரி அளவுக்கு அதிகமான பொற்காசு நிறைந்து இருந்ததால் குள்ளநரிக்கு வயிறு நிரம்பிவிட்டது.ஏமாற்றமடைந்த அனைத்தும் விலங்குகளும் அதை நோக்கி வர குள்ளநரி திரும்பி பார்த்து திணறி ஓட கால்கள் தரையில் ஓடாமல் காற்றில் மிதந்து காற்றை விடவும் வேகமாக ஓடியது. குள்ளநரியின் குகை பாட்டியை தாண்டி தான் உள்ளது அப்படி ஓடும்போது கையில் இருந்த பையை பாட்டி பக்கத்தில் விழுந்தது குட தெரியாமல் போட்டியை விட்டது. பாட்டி அந்த பையை எடுத்து அங்கு உள்ளவர்களிடம் கேட்டார் ஆனால் அது உங்கள் பைதான் வைத்துக்கொள்ளுங்க என்று கூறினார்கள்.வடை முடிந்த பின் கடையை மூடினார் பாட்டி.கையில் பையை வைத்த பாட்டி பையில் கையை விட்டால் தங்கமாக உள்ளது. பாட்டி மகிழ்சியாக சென்றது அப்போதும் தன் தொழிலை விடவில்லை. குள்ளநரி திருடியை சென்றாலும் கடைசியில் நல்லது தன் செய்து உள்ளது.
நமக்கு தெரியா செய்த உதவி யானும்
என்றும் நன்மை தான்.