எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 90 --------------------------------------​ இரண்டு நாட்களுக்கு...

அனுபவத்தின் குரல் - 90 
--------------------------------------​


இரண்டு நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன் . மிகவும் நெருங்கியவர் , நல்லவர் . வல்லவர் செய்யும் பணியில் . அவர் தனது குடும்பத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்த வேளையில் பலகோணங்களில் விவரித்துக் கொண்டிருந்தார் . அவரின் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து முடித்த பின்புதான் மனதளவில் ஓய்வு பெற்றுவிட்டதாக நினைப்பதாகவும் இனி அனைத்தும் அவர்கள் கையில் தான் இருக்கிறது வாழ்க்கையை கடந்து செல்வதும் வழிநடத்தி செல்வதும் என்றும் நல்ல எண்ணத்தில் கூறினார். அவர்களுக்காக நான் தனியாக ஏதும் வீடு,மனை என்று ஒன்றும் வாங்கி வைக்காமல் விட்டதாகவும் , இப்போது நான் உள்ள வீடு எனது உழைப்பால் வாங்கியது என்றும் கூறினார் . எங்களுக்கு பிறகு அவர்கள் பிரித்து எடுத்துக் கொள்ளட்டும் என்றார். அவர்களும் திருப்தியாக சம்மதித்தனர் என்று பெருமையாகவும் கூறினார். அவர் எப்போதும் தனிப்பட்ட விஷயங்களையும் என்னோடு பகிர்ந்து கொள்வார் . நான் அவர்களுக்கு வேறு எதுவும் சேர்த்து வைக்க முடியவில்லை என்றும் சற்று ஆதங்கத்துடன் வருத்தமாக கூறினார்.நான் அவரிடம் அதெற்கெல்லாம் வருத்தப்படாதே , இது போதும் என்று சமாதானப்படுத்தினேன் .


 மேலும் அவர்கள் நல்ல பணியில் இருப்பதால் தானாகவே வீடு வாங்கி கொள்வார்கள் . அதனால் உனக்கு ஒன்றும் இதில் கவலை வேண்டாம் . உனது உழைப்பில் நீ வீடு வாங்கியது போல , அவர்களும் உன்வழிப்படி , நீ விரும்பியது போல நன்றாகத் தானே இருக்கிறார்கள் என்றேன் . இருந்தாலும் அவருக்கு அது ஒரு குறையாக தெரிந்தது . நினைப்பது தவறில்லை , ஆனால் உனது நிலைக்கு இது போதும் , அவர்களும் அவ்வாறு நினைக்காத போது நீயாக உனது மனதில் ஒரு குழப்பத்தை வைத்துக் கொள்ளாதே என்று அறிவுறுத்தினேன் . மேலும் அவரிடம் உனது கடமைகளை அவர்களுக்கு மிக சரியாக செய்து முடித்துவிட்டாய் , அந்த திருப்தியோடு காலத்தை கழித்திடு என்றேன் . உன்னைவிட அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் அதுவே உனது வெற்றிதான் ...நாமெல்லாம் சாதாரண நடுத்தர வர்க்கம் தான் . அதிகம் ஆசைப்படவும் கூடாது , பொருளும் சொத்தும் சேர்க்க வேண்டுமென்ற எண்ணத்தை நம்முள் வளரவிடக் கூடாது . அந்த எண்ணம் நமது மனதில் தேங்கினால்தான் பேராசை என்ற பேய் நம்மை பிடித்துவிடும் . சிந்தனைகளும் மாறும் ...வழிமுறைகளும் மாறும் ...தடம் மாறி வாழ்க்கை எனும் பாதையை விட்டு விலகிச்செல்ல நேரிடும் . அதன் எதிரொலியாக சில விபத்துகளை சந்திக்கவும் நேரிடும் ...அமைதி மறைந்து நமது வாழ்வில் புயல் வீச தொடங்கிடும் . பூஞ்சோலை பாலைவனமாக மாறிடும் . ஆகவே எஞ்சிய வாழ்வை ஏற்ற முறையில் , தகுந்த வழியில் பயணித்து அனுபவிக்க பழகிடு என்றதும் மிகவும் மகிழ்ச்சி நிலைக்கு திரும்பினார் .


இதனை இங்கே பதிவிட காரணம் , நாம் எதையுமே அந்தந்தக் காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளை செவ்வனே முடித்து விட்டு , சேமிப்பையும் நமக்கு என்ன தேவைப்படுமா அந்த அளவிற்கு மட்டும் சேர்த்து வைத்து வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தால் நிம்மதியும் அமைதியும் இன்பமும் நம்மைத் தேடி வரும் . அளவுக்கு மீறி ஆசைப்படவும் வேண்டாம் ...பின்பு நம்மையே நாம் நொந்துக் கொள்ளவும் வேண்டாம் .நாம் போகும் போது எதையும் எடுத்து சொல்லப்போவதில்லை . ஆனால் எதை விட்டு செல்ல வேண்டுமென பகுத்தறிவுடன் வகுத்து வாழ்தல் மிகவும் அவசியம் . நமது வாழ்வு முடிந்த பிறகு பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் எந்தவித சிரமத்தையும், கடன்களையும் , கெட்டபெயரையும் வைத்துவிட்டு செல்வது நிச்சயம் கூடாது . நமது நிலைத்த சொத்து என்பதே நமக்குப் பிறகும் நம்மை பலரும் நினைக்கவும் வாழ்த்தவும் செய்கின்ற நல்ல செயல்களே தவிர வேறில்லை . இது அனைவருக்கும் பொருந்தும் நான் உட்பட .இன்றைய எனது அனுபவத்தின் குரலாக பதிவு செய்கிறேன் .


பழனி குமார்

நாள் : 24-Feb-18, 9:36 am

மேலே