புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல கவிதை படைத்துக் காத்திருக்கும் சக...
புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல கவிதை படைத்துக் காத்திருக்கும் சக படைப்பாளி தோழர்களுக்கு வணக்கம்.... தங்களுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு செய்தி... புத்தாண்டுக்கு கவிதை படைக்குமுன் நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் எழுதிய பாடலையும் படித்துவிட்டு எழுதுங்கள்....!!
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
மேற்கூறிய பாடலில் நாம் எந்த அளவிற்கு மற்ற சமூகத்தினரால் ஆளுமைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறோம் என்று உணர்ந்து பிறகு படைப்புகள் இடவும்... !! நமக்கு தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு....!!