மண்னைத் தோண்டி மனிதனின் அறிவை சோதித்தார்கள். கீழடியில் கிடைத்தவைகள்...
மண்னைத் தோண்டி
மனிதனின்
அறிவை சோதித்தார்கள்.
கீழடியில் கிடைத்தவைகள்
தமிழனை
இந்தியாவுக்கு எடுத்துச் சொன்னது
கண்டவையும் கேட்டவையும்
தமிழனை பெரிதென்று காட்டியது
நாக்கை ஒரு பாவணையில்
அசைத்துப் பேசுபவனுக்கெல்லாம்
அச்சம் தொற்றிக் கொள்ள
அதே நாக்கை
நாலயிரம் பாவணையில்
பேசும் தமிழன் பெருமையை
ஏற்றுக் கொள்ள
துணிவென்பது வரவில்லை..
நிறுத்தப்பட்டது அகழ்வாரய்ச்சி..
நீங்கலெல்லாம் யாரடா
என் பாட்டனின் அறிவை
சோதித்து
தமிழனை முடிவெடுத்திட..
இரண்டு வரி
திருக்குறள் எழுதி வைத்து
அறமும் பொருளும் காமமும்
எடுத்துச் சொல்லி
உலகுக்கு நாங்கள்
கொடுத்த அறிவுரைக்கு ஈடாய்
ஒரு மொழியில்
காட்ட எது இருக்கின்றது
எங்கள் தமிழை விடுத்து உலகில்?