எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோடைக்கு தயாராகுங்கள். கடந்த சில வருடங்களாக பதிவான கோடை...

கோடைக்கு தயாராகுங்கள்.


கடந்த சில வருடங்களாக பதிவான கோடை வெப்பத்தை கணக்கிட்டு பார்த்தால் , குறைந்தது ஒரு டிகிரி பாரன்ஹீட்  ஆவது வருடந்தோறும் அதிகரித்திருக்கும். இதற்க்கு பலகாரணங்கள் சொல்லப்படுகின்றன .

மரங்கள் குறைத்துக்கொண்டு போவது  , மக்கள் தொகை பெருக்கம் , வாகன மற்றும் தொழிசாலை பெருக்கம், மழை குறைவு .இன்னும் பல, பல ..

சரி ,. அதிகரிக்கப்போகும் வெப்பத்தை எப்படி சமாளிப்பது  என்பதும் , யார் யாரேலாம் அதிக கவனத்தோடு இருக்கவேண்டும் என்பதும் இங்கு முக்கியமான கேள்வி . 

குழந்தைகள் , முதியவர்கள் , நீரிழிவு , இதயம் சம்பத்தப்பட்ட நோயுற்றவர்கள் சற்று கூடுதல் கவனத்தோடு இருக்கவேண்டும் . ஏனென்றால் , அதிகவெப்பத்தினால் ஏற்படும் நீர் இழப்பினால் பாதிப்பு சற்று அதிகம் .
மூலையில் ஏற்படும் அதிகப்படியான நீர் இழப்பு ,  வலிப்பு (stroke ) எனப்படும் பாதிப்பால் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த உலகம் எப்படி மூன்று பங்கு நீரினால் சூழப்பட்டுள்ளதோ, அதேபோல இந்த உடலும் மூன்றுபங்கு ( 72%)  நீரினால் ஆனது. எனவே நீர்சத்து அதிகம் உள்ள பழங்கள் , காய்கறிகளை அதிகமாக உண்ணலாம் . அதற்காக , வாயில்  நுழையாத ஆங்கில பேர்களில் வரும் , இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த  பழங்களை வாங்கி, காசை கொட்டி ஏமாற வேண்டாம் .நம்மை சுற்றி கிடைக்கும் இந்த கோடை பருவ பழங்களும் , காய்கறிகளுமே போதுமானது . 

தாகம் தணிக்கும் பானங்கள் அருந்தலாம் . மோர் ,இளநீர் , கூழ் , எலுமிச்சை சாறு , கற்றாழை சாறு , வெட்டிவேர் நீர் .. இன்னும் பல எளிய பானங்கள் .  கண்டிப்பாக பாட்டிலில் , பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கலர் குளிர்பானங்கள் அல்ல. அதற்குப்பதில் வீட்டில் இருக்கும் குடி தண்ணீர் எவ்வளவோ மேல்.  அதனால் , வெளியில் செல்லும்பொழுது வெயிலுக்கு குடையோடு ,தண்ணீர் புட்டியையும் தேவைகேற்றளவில் எடுத்து  செல்வது மிக முக்கியம் . இல்லையெனில் , கடையில் கிடைக்கும் தண்ணீர் புட்டி  மற்றும் பாக்கெட் ,  சிலநேரங்களில் சொந்தச்செலவில் சூன்யம் வைப்பதுபோல உடல்நலக்கேட்டை  ஏற்படுத்தலாம். 

காலை, மாலை இரண்டுவேலையும் பச்சை தண்ணீரில் குளிப்பது குதூகலம் தான் , குழந்தைகள் போல .. குளிப்பது என்றாலே , தலையோடு சேர்த்துகுளிப்பதுதான் முழுமையான குளியல்.

அதிக மசாலாக்கள் , எண்ணெய்கள் இல்லாத எளிய உணவுகள் கோடைக்கு மிகவும் உகந்தது .

நாம் மட்டும் பாதுகாத்துக்கொண்டாள் போதுமா ? . கோடைகாலங்களில் நம்மை தேடிவரும் மக்களுக்கு தேனீர் , குளிர்பானகளுக்கு பதில் தண்ணீர் , மற்றும் மோர் கொடுக்கலாம் .
அரசியல்வாதிகளும் , அறக்கட்டளைகளும் மட்டும் நீர் மற்றும் மோர் பந்தல் அமைத்தால் போதாது . 
தனிப்பட்ட  முறையில் நாமும் உதவலாம், பொதுமக்கள் கூடும் இடங்களில் , அல்லது உங்கள் தெருக்களில் . மானிட தாகத்தோடு சற்றும் கால்நடைகளுக்கும் , பறவைகளுக்கும் சேர்த்து நீர்தொட்டிகளை அமைத்து உதவலாம் . 

கோடைக்கு குடை பிடிப்போம் , குதூகலிப்போம். 

பதிவு : சகி
நாள் : 4-Apr-18, 5:14 pm

மேலே