(அம்மாவும் நானும்) ஆறுவயதிருக்கும் குட்டி கால்கள் பிஞ்சு கைகள்...
(அம்மாவும் நானும்)
ஆறுவயதிருக்கும்
குட்டி கால்கள்
பிஞ்சு கைகள்
அருகிலுள்ள அரசு பள்ளியில் கல்வி
இயற்கை எழில் சூழ்ந்த பள்ளி
ஒரு காலை நேரம்
அம்மா என்னை குளிப்பாட்டி
காலை உணவை ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தாள்
சட்டையில் வாயை துடைத்தபடி
பள்ளிக்கு புறப்பட்டேன்
கட்டில் கடை பாட்டி
நினைவிற்கு வந்தாள்
"அம்மா ஒரு ரூபா குடு
பாட்டி கடைல முட்டாய் வாங்கனும் "என்றேன்
மறுத்தாள்
அழுதுகொண்டே புறப்பட்டேன்
திரும்பி பார்த்தேன் வரவில்லை
கொஞ்ச தூரம் சென்ற பின்
திரும்பி பார்த்தேன்
"டே இந்தாடா" என்று ஓடி வந்தாள்
வேகமாக ஓடினேன்
குட்டிக் கால்கள் எவ்வளவு வேகம் செல்லும்
ஓடி வந்து பிடித்தாள்
கையில் காசை கொடுத்தாள்
"போடி நீயும் வேண்டாம்
உன் காசும் வேண்டாம் "
என்று தட்டி விட்டேன்
அழுகையை நிறுத்தி
சட்டைப்பையில் காசை திணித்தாள்
பாட்டியிடம் முட்டாய் வாங்கி செல்வதைக் கண்டு
புன்னகைத்தாள்
அம்மா என்னும் வார்த்தையை கேட்டால்
நான் கண்ணீர் விடுவதற்கு காரணம்
இந்நிகழ்வுதான்
குட்டி கால்கள்
பிஞ்சு கைகள்
அருகிலுள்ள அரசு பள்ளியில் கல்வி
இயற்கை எழில் சூழ்ந்த பள்ளி
ஒரு காலை நேரம்
அம்மா என்னை குளிப்பாட்டி
காலை உணவை ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தாள்
சட்டையில் வாயை துடைத்தபடி
பள்ளிக்கு புறப்பட்டேன்
கட்டில் கடை பாட்டி
நினைவிற்கு வந்தாள்
"அம்மா ஒரு ரூபா குடு
பாட்டி கடைல முட்டாய் வாங்கனும் "என்றேன்
மறுத்தாள்
அழுதுகொண்டே புறப்பட்டேன்
திரும்பி பார்த்தேன் வரவில்லை
கொஞ்ச தூரம் சென்ற பின்
திரும்பி பார்த்தேன்
"டே இந்தாடா" என்று ஓடி வந்தாள்
வேகமாக ஓடினேன்
குட்டிக் கால்கள் எவ்வளவு வேகம் செல்லும்
ஓடி வந்து பிடித்தாள்
கையில் காசை கொடுத்தாள்
"போடி நீயும் வேண்டாம்
உன் காசும் வேண்டாம் "
என்று தட்டி விட்டேன்
அழுகையை நிறுத்தி
சட்டைப்பையில் காசை திணித்தாள்
பாட்டியிடம் முட்டாய் வாங்கி செல்வதைக் கண்டு
புன்னகைத்தாள்
அம்மா என்னும் வார்த்தையை கேட்டால்
நான் கண்ணீர் விடுவதற்கு காரணம்
இந்நிகழ்வுதான்