எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்: மே தின வாழ்த்து...

தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்:  மே தின வாழ்த்து

“தற்போதைய  அரசு தொழிலாளர் வர்க்கத்தின் மீது மோசமான தாக்குதலைத் தொடுத்து வருகிறது. போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகள், தொழிலாளர் நலச் சட்டங்கள், அனைத்தும் குப்பைக் கூடையில் வீசி எறிந்து இருக்கிற  அரசு, தற்போது ‘வேலை வரம்பு ஒப்பந்தம்’ (Fixed Term Employment)’ என்ற பெயரில் சட்டத் திருத்தம் கொண்டுவர டிசம்பர் 2017-ல் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையை அறவே ஒழிக்க வேண்டும் என்று சட்டப்பூர்வமாக தொழிற்சங்கங்கள் போராடி வரும் நிலையில், ஒப்பந்த முறையை ஊக்குவிக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தரத்தன்மை கொண்ட பணிகள் அனைத்தும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு தூக்கி எறியும் வகையில் ‘வேலை வரம்பு ஒப்பந்தம்’ என்ற பெயரில்  அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது.
தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்கவும், தொழிலாளர் வர்க்கம் ஓரணியில் நின்று போராடவும் இந்த மே நாளில் உறுதியை மேற்கொள்வோம்.


நாள் : 1-May-18, 10:34 pm

மேலே