எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

+2 விடுமுறை நாளொன்றில் ஒரு சிறிய நான்கு சக்கர...

+2 விடுமுறை நாளொன்றில்
ஒரு சிறிய நான்கு சக்கர வாகனத்தில்
மே மாத இரவு நேரத்தில்
சபரிமலை நோக்கி பயணித்தோம்
நானும் என் நண்பனும்

எதிர்காலத்தைப் பற்றிய
பயமில்லாத காலம் அது
எங்களுடன் அப்பாவும்
அவரது நண்பர்களும் இருந்தார்கள்

நாங்கள் அனிருத் இசையை
விரும்புபவர்கள்
குத்துப் பாடல்களை
கேட்டுக்கொண்டே
பயணித்தோம்
“என்னடா பாட்டு இது,
சாமி பாட்டு போடுங்க”
என்று கோரசாக கத்தினர்
என் அப்பாவும் அவரது நண்பர்களும்

அவர்கள் சாமி பாடல்களை
ரசித்துக்கொண்டே வருவார்கள்
நாங்களோ வெறுப்பின்
உச்சகட்டத்தில் இருப்போம்
அடிக்கடி தேநீர் கடைகளில்
நிறுத்தச் சொல்வார்கள்

கம்பம் ஊரை நெருங்கினோம்
அங்குள்ள திராட்சை தோட்டங்களும்
தூரத்தில் தெரியும் மலைகளும்
முகத்தில் வீசும் குளிர் காற்றும்
ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது
அங்குள்ள ஒரு தேநீர் கடையில்
வண்டியை நிறுத்தி
வழி கேட்டோம்
அவர்கள் பேசிய மொழியும்
சற்று விநோதமாகவே இருந்தது

ஊர் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது
மலை உச்சியில் மின்னிய நட்சத்திரங்கள்
“நகரம் இந்த உணர்வை தருமா?” என்று கேட்டன

பதிவு : நா கோபால்
நாள் : 2-May-18, 7:41 pm

மேலே