எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இச்சைகளும் இம்சைகளும் ஆணாதிக்கத்தின் உச்சமாக பெண்களை மதியா பிணங்களாய்...


இச்சைகளும் இம்சைகளும்


ஆணாதிக்கத்தின்


உச்சமாக 


பெண்களை மதியா


பிணங்களாய்


நடைப்பிணமாக அலையவிடப்பட்டு


கொண்டிருக்கும் 


பெண்ணினத்தின் 


அவலங்கள்


நாகரீக வளர்ச்சியின்


உச்சக்கட்டம்


அநாகரீக செயற்பாடுகளும்


முறையற்ற தொடர்புகளும்


வயது வேறுபாடின்றி


வேரொடு புடுங்கியெறியப்பட


கல்லாயில்லாவிடின்


கடவுளையே கற்பழிக்கும்


காமுகர் கூட்டங்கள்


தானாய் மாறவேண்டும் இல்லை


சட்டம் மாற்ற வேண்டும்


ஈனப்பிறவிகளின் 


எண்ணம் மாறி


இந்த உலகில்


பெண்களெல்லாம்


நிம்மதியாய் 


வாழ வேண்டும்!!!



பதிவு : டர்மி
நாள் : 3-May-18, 9:08 pm

மேலே