சமூக நீதி காவலரின் காவிய நாள் அழகு தமிழில்...
சமூக நீதி காவலரின் காவிய நாள்
அழகு தமிழில் ஆழ்ந்த கருத்துக்கள்
கலைஞர் தம் கவிதை நடை
பழகு வசனம் வார்த்தை வளம்
மனோகரர் இலக்கிய நடை
"இளமை பலி" யில் தொடங்கிய வேகம்
கண்டதும் கேட்டதும் அரசியலில் விவேகம்
அள்ளி கொடுப்பதை உள்ளம் உரைத்தது
நெஞ்சுக்கு நீதி மனதில் பதித்தது
தன்னூக்க ஆர்வலர் அணிவகுப்பு
தலைவர்தம் இலட்சிய பாதையில்
அரசியல் ஆசான்கள் அணிவகுப்பு
இவர்தம் இலக்கண பாதையில்
தொண்ணூற்று நான்கிலும்
சிந்தனை வற்றா கருப்பாநதி
கண்ணுற்று மகிழும் நாம்
நீடு வாழ்வார் கருணாநிதி (அவர்கள்)
:: கடையநல்லூரான்