எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

💘என்றும் உன் நினைவில் நான்💘 "பருவத்தின் காதல் என்...

💘என்றும் உன் நினைவில் நான்💘

"பருவத்தின் காதல் என்
 இருவத்தில் நுழைந்து உன்
 உருவத்தில் வந்த மாயமென்ன?"

"புருவத்தில் மட்டும் நில்லாது
 இருதயத்தில் வெட்டும் கல்லாக
 மிருவத்தால் அடித்த மாயமென்ன?"

"துருவத்தை தேடிய காதல்நாழிகைகள்
 உருவிழந்து வாடிய மலர்முள்ளாய்
 கருவிழந்த என் மனதை தைத்தும்
 குறும்பூ உனை துளைக்காத மாயமென்ன?"

"மனமென்றால் இணையத்தானே!"
"மலரென்றால் பறிக்கத்தானே!"

"மலர் மனதை திறப்பாயா ! சொல்
 மறு முறையும் உனக்காக ஒரு
 கரு வறையில் பிறந்து
 மறு ஜென்மம் நான் எடுப்பேன்
 இரு கைகோர்த்து நாம் வாழ!" 💘💔💘

                          💔R💘B💔

பதிவு : ரமேஷ் RB
நாள் : 7-Jun-18, 10:04 pm

மேலே