ரமேஷ் RB - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/jvkaq_38668.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ரமேஷ் RB |
இடம் | : Karungal |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
ரமேஷ் RB செய்திகள்
💔காதலியின் நினைவுகள்💔
"சிற்பமே சிவந்து
நிற்பதை உணர்ந்து
கற்பவை மறந்து
காதல் பூ மலர்ந்ததே!
அற்பமாய் உள்ளில்"
"பார்வைகள் தூரமாக
வார்த்தைகள் ஓரமாக
ஈர்இமைகள் ஈரமாகி
தேர்சுமக்கும் சக்கரமாய்
ஊர்முழுக்கும் சுற்றியதே!
சோர்விழந்தும் என் மனம்"
"மார்புக்குள் இதயம் பாதி
தேர்வுக்கு காக்கும் கதியில் - நம்
சேர்வுக்கு ஏங்கிய மதிக்கு
தீர்வாய் உரைத்தாயே! விதியை
ஏனோ!
என்னை வெறுத்தாயே ரதியே!"
"உந்தன் திசைகள் தேடியே
எந்தன் ஆசைகள் முடியாமல்
நெஞ்சில் ஓசையாய் துடித்து
அடியோடு அழிந்தே போகுதே!"
"அன்னை தந்த ஆயுள்
உன்னை நினைந்தே
என்னை மறந்து
மண்ணை விட்டு போகுமோ!"
💘R💔B💘
💘என்றும் உன் நினைவில் நான்💘
"பருவத்தின் காதல் என்
இருவத்தில் நுழைந்து உன்
உருவத்தில் வந்த மாயமென்ன?"
"புருவத்தில் மட்டும் நில்லாது
இருதயத்தில் வெட்டும் கல்லாக
மிருவத்தால் அடித்த மாயமென்ன?"
"துருவத்தை தேடிய காதல்நாழிகைகள்
உருவிழந்து வாடிய மலர்முள்ளாய்
கருவிழந்த என் மனதை தைத்தும்
குறும்பூ உனை துளைக்காத மாயமென்ன?"
"மனமென்றால் இணையத்தானே!"
"மலரென்றால் பறிக்கத்தானே!"
"மலர் மனதை திறப்பாயா ! சொல்
மறு முறையும் உனக்காக ஒரு
கரு வறையில் பிறந்து
மறு ஜென்மம் நான் எடுப்பேன்
இரு கைகோர்த்து நாம் வாழ!" 💘💔💘
💔R💘B💔
💘💔தேவதையின் பேரழகு💔💘
"பெண்தாமரை முகமோ !
செம்மலரினும் பேரழுகு"
"இரு கரு நீல விழியோ !
ஏழ் நிறத்தினும் பேரழுகு"
"மூங்கிலிழை புருவமோ!
வான்வில்லினும் பேரழகு"
"நெற்றி் தொட்டு ஒட்டும் பொட்டோ !
சுற்றும் கரைவிளக்கினும் பேரழுகு"
"தேன் சிந்தும் இதழோ !
முல்லை பூ இதழினும் பேரழுகு"
"காதோரம் சாயும் மென்கூந்தலோ !
கடலோரம் பாயும் நதியினும் பேரழுகு"
"சிவந்த கன்னங்களின் குழியோ !
பளிங்கு கிண்ணங்களினும் பேரழுகு"
"மின்னும் சிரிப்பழகோ !
மின்னலினும் பேரழுகு"
"எழில் கழுத்தில் அணிவதோ !
மயில் இழையினும் பேரழகு"
"வஞ்சி கொடி இடையோ
கொஞ்சும் அடி நடையோ
பஞ்சு சிலை எடையோ
கெஞ்சி வியக்கும் - அழகில்
மங்கை நீ மாயவிடையோ" ! 💔💘💔
💘R💔B💘
💘தேவதைகளின் தேவதை💘
""வான் நிறம் வண்ணநிறமே
பொன்னிறமோ! உன் நிறம்""
""சிட்டுப்பூ வட்டவடிவே
வெண்பூமுகமோ! உன் முகம்""
""வான்மேகம் பார்மேகமே- உன்
கார்கூந்தலோ! மழைமேகம்""
""குயில்பாடும் மலையோரமே
மயில்ஆடுதே உன் காதோரம்""
""பனி பூக்கள் கனி காவியமே
வில் ஓவியமோ! உன் விழிபூக்கள்"'
""நிலவு ஒளிர இயற் தளிருதே
தினம் சிப்பி மிளிரதே உன் இதழில்""
""மூங்கிலிழல் முல்லையிழயே
தேன்குழலோ! உன் விரல்கள்"'
""வாழையிடை கொடியிடையே
பொடியிடையோ! உன் இடை""
மல்லிப்பூ கரமோ !
மாவிலை பாதமோ !
மாது நீ வேதமோ !💔💘💔
💘R💔B💘
என் காதலியே !💖💘💖
""மலராக உன்னை நினைத்து
மனதில் அடைத்ததாலோ
மொளனமாக நீ இருந்து
மரண வலி தருகிறாய்
என் இதயத்திற்கு""💘💔💘
""கண்களில் உன்னை வைத்து
கருவிழியாய் சுமப்பதாலோ
கருணை கொலை செய்யாமல்
கண்ணீர் துளி தருகிறாய்
என் கண்களுக்கு""💔💘💔
💘R💔B💘
மேலும்...
கருத்துகள்