கருவிலே உயிரை சுமந்து கார்மேகமாய் காட்சி தந்து கடினமான...
கருவிலே உயிரை சுமந்து
கார்மேகமாய் காட்சி தந்து
கடினமான பாதைகளை கடந்த
காருண்ய தேவி நீயன்றோ
சூரியன் மாலையில் மறைந்தாலும் உன் பணி ஓய்வதில்லை
சமையல் அறை உன் சாதனை அறை
நீ சாதிக்க பிறந்தவள்
சாக பிறந்தவள் அல்ல
கண்ணகியும் நீ
பாஞ்சாலியும் நீ
சிந்தனை நீ செயலும் நீ
நெற்றியிலே திலகமிட்டு
நேரிய நடை போட்டு
உச்சம்தனை தொட்டவள் நீ
உதிரம் உனக்கு புதிதல்ல உத்தமி நீ என்பதால்
புறப்படு பெண்ணே புதுயுகம் படைக்க -மாற்றம் நீ மங்கையும் நீ