எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேவதை யார்?? நீ முதன் முதலாய் அழுத போது,...

தேவதை யார்??

நீ முதன் முதலாய் அழுத போது,
   உன்னை பார்த்து சிரித்தவள்....
உன் முதல் வெற்றியின் போது,
   உன்னை கண்டு அழுதவள்....
ஊரவர் கேலியாய் சிரித்தாலும் ,
   உன் சிரிப்பிற்காய் கேலிச்சித்திரமாய் மாறியவள்...
நீ ஆயிரம் தவறுகள் செய்த போதிலும் ,
   மன்னிப்பை மட்டுமே தண்டனையாக தருபவள்...
நீ நினைத்து கொண்டிருக்கும்தேவதையல்ல அவள்....
   எப்பொழுதும் உன்னை பற்றியே நினைத்து கொண்டிருக்கும் தேவதை அவள்....
அவள் தேவதையினும் அழகானவள்....
   அவளே உன் தாயானவள்...

நாள் : 22-Aug-18, 11:12 pm

மேலே