மெல்ல மெல்ல மழைநீர் கொட்டும் சாரலில் மெதுவாக நீ...
மெல்ல மெல்ல மழைநீர்
கொட்டும் சாரலில்
மெதுவாக நீ நடந்தால்...
மெய் சிலிர்க்கும் அந்த
மாலை வேலையில்
மெய்யால் நீயெனை தொட்டால்...
சிலிர்த்தேன் சிரம் தாழ்த்தினேன்
சிந்தையில்யுனை ஏற்றினேன்...
கலந்தேன் காற்றில் பாடினேன்
காதலிசை உருவாக்கினேன்...
அந்நாளில் கண்ட கனவெல்லாம்
உன் பாதமடியில் நான்வைத்து
அக்காலம் என்னிடம் பொய்சொன்னால்
அகலாமல் கண்ணே உடனிருப்பேன்.
அன்பால் கண் இமையால்
ஒரு இமையிசை
என்னிடம் நீ சேர்த்தால்...
அகன்றால் அகல் விளக்கால்
அழகே அழகாய்
என் ஆசை எறிந்தால்...
ஒரு வார்த்தை பேசிய
உன் மடியில்
தலை சாய்த்துக் கண்ணினை
நான் மூடி
உன் கைகள் என்தன்
தலை கோரினால்
மேகமே நீ ஏன்
கோபம் கொள்கிறாய்...
மழையாலே எனை வெல்கிறாய்.
பார்த்திட அம்மேகம்...
மழையாலேதான் கோபம்...
கண்ணீரோடு சாரலாய் சொல்கிறாய்...
அந்நாளில் கண்ட கனவெல்லாம்
உன் பாதமடியில் நான்வைத்து
அக்காலம் என்னிடம் பொய்சொன்னால்
அகலாமல் கண்ணே உடனிருப்பேன்.