சாதி வெறி பிடித்து சாவு ருசிகண்ட காவியுடையணிந்த பாவி...
சாதி வெறி பிடித்து
சாவு ருசிகண்ட
காவியுடையணிந்த
பாவி நிறை நாடே !
பகுத்தறிவற்ற பன்றிகள் வாழும்
பகைமையை வளர்த்த
பேடிகளை போற்றிடும்
பண்பற்றோர் நிறை நாடே !
ஊரை அழித்து
ஊழலில் திளைப்போரை
ஊக்குவித்து ஊட்டிவிடும்
ஊமைகள் நிறை நாடே !
மூடத்தனம் நீங்கி
பகுத்தறிந்து பண்புணர
பாவிகளின் பகடையாகாது
உரிமை பெற்றிடப் போராடுவோம் ✊🏽