எழுத்தில் உன் உருவம் எழுத முயன்றேன் எழுத முடியவில்லை...
எழுத்தில்
உன் உருவம்
எழுத முயன்றேன்
எழுத முடியவில்லை - அதனால்
எழுதிவிட்டேன்
உன் பெயரை ஓர் எழுத்தாக
ஓர் எழுத்து வார்த்தை அல்ல
உன் பெயர் - ஆனால்
உன் பெயரும்
ஓர் எழுத்தாக ஆனதே
எனக்கு மட்டும்....
(எழுத்து-ஓவியம்)