எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நமது நாட்டில் தற்போது எந்தவொரு பிரச்சினையும் இல்லை. மக்கள்...

நமது நாட்டில் தற்போது எந்தவொரு பிரச்சினையும் இல்லை. மக்கள் சுபிட்சமாக உள்ளார்கள். மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார்கள். காரணம் விலைவாசி மிகவும் சரிந்து விட்டது. மளிகை பொருட்கள் விலை மிக மிக குறைவான விலையில் கிடைக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை பாதிவிலை குறைந்து கேஸ்சிலிண்டர் 100 ரூபாய்க்கு இறங்கி வந்து விட்டது. சாலைகளில் வசிப்பவர்கள் கூட மூன்று வேளை வயிறார சாப்பிடூகிறாராகள். அந்த அளவுக்கு மத்திய மாநில அரசுகள் மக்களை குறையின்றி வைத்து இருக்கிறது. பணத்தட்டுப்பாடே எங்கும் எதிலும் இல்லை. பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா தொடர்ந்து இந்த மூன்று ஆண்டுகள் முதலிடம் வகிக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மத்திய அரசு மொத்தம் திருப்பி எடுத்து வந்து விட்டது. அனைத்து வங்கிகளில் வாராக்கடன் என்று ஒன்று இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம் என்று இருப்பதாகவே தெரியவில்லை. எல்லா மதத்தினரும் மனமாச்சரியங்கள் இன்றி அனைத்தும் ஒரே மதம் என்று புரிதலுடன் மக்கள் இணைந்து இருக்கிறார்கள்.


( இவ்வளவும் கற்பனைதான் என்றாலும் ஆனால் இவை யாவும் உண்மையாக இருக்கும் சூழ்நிலை போல நினைத்துக் கொண்டு மகா மட்டமான தேவையற்ற சில விஷயங்களை வேண்டுமென்றே அரசியல் கலந்து மத்திய மாநில அரசுகளின் தூண்டுதலின் பேரில் நடக்கும் நாடகமே )


ஆனால் இப்போது நாட்டையே அழிக்க கூடிய மிகவும் பெரிய விவகாரம் சபரிமலைக்கு பெண்கள் அனுமதிப்பது பற்றியும் என்றோ முடிந்த விஷயத்தை வைத்து தற்போது அரசியல் ஆதாயத்திற்காக விளம்பரத்திற்காக ஊடகங்களில் விவாதமாகவும் அங்கங்கே போராட்டத்தில் ஈடுபடுவதும் பெரிய பொருளாக மாற்றி மக்கள் குறைகளை தேவைகளை கோரிக்கையை திசைதிருப்ப நடத்தப்படும் நாடகங்கள் தான் இவை.அதேபோல் என்றோ முடிந்த விஷயமாக கூறப்படும் பாலியல் வன்முறை நிகழ்வுகள், அது உண்மையா அல்லது பொய்யா என்று தெரியாத நிலையில் , இன்று Metoo மூலம் மீண்டும் உயிர்பெற வைத்து விளமபரம் தேடும் நிலையும் தான் இன்று கொடிகட்டிப் பறக்கிறது. 

அதிலும் அரசியல் மோசடிகள் காழ்ப்புணர்ச்சி வெளிப்படுகிறது தேவையின்றி .இவையெல்லாம் தேவை தானா..?.மற்ற பிரச்சனைகள் மறந்து போக மக்களை திசை திருப்ப நடத்தப்படும் நாடகமே இது.

ஏன் இந்த இரட்டை வேடம்? உண்மை நிலையை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அல்லது மறக்கிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் என்ன ...?
யார் செய்த தவறு...?
தயவுசெய்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 
இனி சீரான சமுதாயம் காண முடியுமா என்ற ஏக்கமே பிறக்கிறது ஆதங்கம் மேலோங்குகிறது .

பழனி குமார்  

நாள் : 19-Oct-18, 6:45 am

மேலே