எந்த ஒரு அரசாங்கமும் அது மத்தியில் இருந்தாலும் சரி...
எந்த ஒரு அரசாங்கமும் அது மத்தியில் இருந்தாலும் சரி மாநிலத்தில் இருப்பவர்கள் ஆனாலும் சரி, தமது ஆட்சியில் மக்கள் பயன்பெறும் வகையில் பணியாற்ற வேண்டும். அதற்கேற்ப திட்டங்கள் வகுக்க வேண்டும். அதன் பிறகு அந்த திட்டத்தின் பலன்கள் நேரிடையாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு சென்று அடைவதை கண்காணிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தில் மக்கள் ஆட்சி எனப்படும்.
அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்திடும் முறையில் ஆட்சி புரிய வேண்டும்.
ஆனால் இன்று....
ஒவ்வொரு நாளும் நடப்பவை மக்களை கீழ் நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை மறுக்க முடியாது.
மதவெறி, அரசியல் காழ்ப்புணர்ச்சி, பதவி துஷ்பிரயோகம், தவறான வழியில் சொத்துக்கள் குவித்தல், எதிலும் இரட்டை வேடம் என இப்படித்தான் நகர்கிறது நாட்கள். ஊழல் ஊறிகிடக்கிறது எதிலும். அனைத்து மட்டங்களிலும் துறைகளிலும். வேதனை அளிக்கிறது.
அரசியல் களம் அசிங்கமாக மாறிக் கொண்டே இருக்கிறது.
வளரும், வளர்ந்த தலைமுறை நிச்சயம் இதனை உணர்ந்து மாற்றம் நிகழும் வண்ணம் சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.
வருங்கால நிலையை நினைத்து வருத்தமுடன்,
பழனி குமார்