ஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் மருத்துவர்...
ஆசியாவின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை பெண் மருத்துவர் டி.எஸ்.கனகா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.
உலகளவில் 3-வது பெண் அறுவை சிகிச்சை நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.
மருத்துவர் கனகா தனது ஓய்வுக்குப் பின் ஏழைகளுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் உதவ விரும்பினார், இலக்காக வைத்திருந்தார். முதியோர்களுக்குச் சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துவர் கனகா விரும்பினார். குரோம்பேட்டையில் சிறீ சந்தான கிருஷ்ணா பத்மாவதி சுகாதார மையம் மற்றும் ஆய்வு மையத்தை நிறுவினார். கடைசிக் காலத்தில் தன்னுடைய ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் இந்த மையத்துக்கே செலவிட்டார். மருத்துவர் டி கனகாவுக்கு, 'மூளை தூண்டுதல்' அதாவது 'மூளை பேஸ்பேக்கர்' எனும் பிரிவில் அதிகமான ஆர்வத்துடன் இருந்தார்’’
சென்னை மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் துறையின் முன்னாள் தலைவர் கே.தெய்வீகன் கூறுகையில், “ ஸ்டீரியோடாக்டிக் பிரிவில் ஏராளமான முன்னோடி பணிகளை மருத்துவர் கனகா , பேராரிசியர் வி. பாலசுப்பிரமணியன் எஸ். கல்யானராமன் ஆகியோருடன் சேர்ந்து செய்துள்ளார். மற்றொரு ஆர்வமான பிரிவு என்பது, பெருமூளை வாதம்(செரிபல் பிளாசி) பிரிவாகும் “ எனத் தெரிவித்தார்.