வாழ்க்கைப் பாடம் 12 ******************* பொதுவாக பலரும் கூறுவது...
வாழ்க்கைப் பாடம் 12
*******************
பொதுவாக பலரும் கூறுவது வழக்கம், செய்ய நினைப்பதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். கூற வருவதை காலம் கடத்தாமல் உடனே கூறுதல் வேண்டும் என்று. உண்மைதான். யோசித்து பார்த்தால் அது தவறல்ல. எதையும் தள்ளி வைக்கக் கூடாது என்பது எனது வாழ்க்கையில் கண்டும் , அறிந்தும் புரிந்தும் கொண்டேன்.காரணம் நாம் சில நேரங்களில் ஏதாவது ஒரு காரணத்தால் அல்லது தவிர்க்கும் நோக்கத்தில் ஒத்தி வைத்தலும் அல்லது ஒரு முடிவு எடுக்காமல் இருந்தால் அதன் விளைவு வேறு மாதிரி இருந்திட வாய்ப்புண்டு. அதனால் நாம் நிச்சயம் வருந்த வேண்டி இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், நாம் கூற விரும்புவதையோ, செயலாக்க நினைத்து அதை குழப்பம் காரணமாக அல்லது என்ன முடிவு எடுக்கலாம் என்று புரியாத நிலையில் இருந்தால் அக்காரியம் நம்மை கைவிட்டு போகும் நிலை உருவாகும் . அதேபோல நாம் கூற நினைத்ததை, வேறொருவர் அதை கூறி நற்பெயர் எடுத்துக் கொள்வது மட்டுமன்றி நமது மனதில் ஒரு கலக்கம் ஏற்படும். குற்ற உணர்வும் நம்மைப் பாடாய்ப்படுத்தும். இதுபோன்ற நிகழ்வுகள் நிறைய பலருக்கும் நடந்திருக்க கூடும்.
அதாவது காலம் பொன் போன்றது என்பதை போல, ஆற்ற வேண்டிய பணி மற்றும் கடமைகளை அல்லது செயல்களைச் சரியான நேரத்தில் செய்யும் திறன் கண்டிப்பாக இருந்திடல் மிகவும் அவசியம். மனதில் பட்டதைக் கூறி தமது கருத்துக்களை விரைவாக பதிவு செய்வது சாலச் சிறந்தது.
நாம் எதிலும் ஒரு சுணக்கம் காட்டினால், பிறகு பார்க்கலாம் என்று நினைத்து தள்ளி வைத்தால் நமது எண்ணம் குறிக்கோள் செயல் இவை அனைத்தும் நம்மைவிட்டு விலகி சென்று விடும் என்பது எனது வாழ்க்கையில் கற்ற,எனது சொந்த அனுபவத்தின் மூலம் நான் புரிந்து கொண்ட பாடம் ஆகும்.
பழனி குமார்
3.12.2018
3.12.2018