எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கைப் பாடம் 16 ----------------------------------- ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு...

  வாழ்க்கைப் பாடம் 16
-----------------------------------
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து முடிக்க நினைக்கும்போது அல்லது சாதிக்க விரும்பும்போது ​, அது நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோள் ,எண்ணம் இருப்பது தவறில்லை . ஆனால் சில வேளைகளில் அது கைகூடாமல் போகலாம் , தோல்வியைத் தழுவலாம் . அந்த நேரத்தில் மனம் உடைந்து , கவலையில் தோய்ந்து , வீழ்ந்துவிட்டதாக நினைக்கக் கூடாது . தோல்வியே வெற்றியின் முதல்படி என்று பலரும் கூறுவர் . நாம் எப்போதும் வெற்றியை எதிர்நோக்கி நடைபோடும்போது , தடைகளும் தவறுகளும் நேர்வது இயற்கை . 


நமது எண்ண ஓட்டமும் , செயலுக்கான பாதையும் , மாறிடக் கூடாது . வெற்றியை நோக்கி நாம்தான் ஓடவேண்டும் , மாறாக அது நம்மை பின்னால் துரத்தி வராது . வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலத்தான் . அதை மறக்கக்கூடாது .ஒரு நாணயத்தை சுண்டி விடும்போது ஏதாவது ஒரு பக்கமே நம் கண்ணில் தெரியும்படி விழும் . அது நாம் எதிர்பார்த்த ஒன்றாகவோ அல்லது மறுபக்கமாகவோ இருக்கலாம் . ஆனால் நாம் விரும்பும் அல்லது எதிர்பார்க்கிற பக்கம் தெரியும்படி விழும்வரை நாம் தொடர்ந்து அதை செய்வது போலவே தான் நாம் பெறும் வெற்றியும். 

அந்த முயற்சியில் நாம் என்றும் தொய்ந்து விடக்கூடாது .சிந்தை கலங்கி சோர்வடைதல் கூடாது .அரசியல் கட்சிகளில் ஏற்கனவே இருந்த , இப்போது இருக்கிற பல தலைவர்களும் அப்படி நினைத்து ஒதுங்கி அல்லது விலகி சென்று இருப்பார்களேயானால் , அவர்கள் இன்று தலைமை தாங்கும் நிலையை அடைந்தும் இருக்க மாட்டார்கள் , அவர்களை தலைவர்கள் என்றும் அழைக்கப்படவும் மாட்டார்கள் . 

இது அனைத்து துறைக்கும் பொருந்தும் . அனைத்துப் பருவத்தினர் மற்றும் எக்காலத்திலும் பொருந்தும் . அப்படியே தோல்வி அடைந்தாலும் அது ஒன்று பெரிய அவமானம் அல்ல ...அவ்வாறு நினைக்கவும் கூடாது . தோல்வியினால் பெறும் அவமானத்தால் இரண்டு நிலைகள் ஏற்படும் இயற்கையாக . ஒன்று அவமானம் மனதில் கோழைத்தனத்தை உருவாக்கி உயிரை மாய்த்துக் கொள்ளவும் மனம் நாடும் , மற்றொன்று அவமானத்தை அஸ்திவாரமாக மாற்றி, வெற்றியை ஈட்டிட அடித்தளமாக அமைந்திட உதவும் .முதலாவது கோழையை உருவாக்குவது அடுத்தது ஒருவன் வெற்றிப்பெற்று வீரனாக வாழ வழிவகை செய்கிறது .பல தலைவர்களின் , வீரர்களின் வரலாறு நமக்கு இதை ஒரு பாடமாக உணர்த்துகிறது என்பதும் , வருங்காலத்திலும் வளரும் தலைமுறைக்கு உணர்த்தும் என்பதிலும் ஐயமில்லை .


பழனி குமார் 
​ 13.12.2018​  

நாள் : 13-Dec-18, 10:13 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே