எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? இந்த படைப்பை...

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா?


இந்த படைப்பை படைத்தவர் யாரோ? ஆனால் அவர் வாழ்வின் தத்துவமான உண்மையை நன்கு உணர்ந்தவர். ஆயிரம் கைகொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்ற யதார்த்தத்தை தெரிந்தவர். எந்த இடத்திலும் எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்றோ எல்லாம் அவன் செயல் என்றோ நமக்கு அவர் கண்கட்டி வித்தை காண்பிக்க முயலவில்லை. தன் கருத்தை கருத்தோடு மோதும் பண்புள்ளவர். அதனால்தான் உடனே மனம் ஏற்காது. ஆனால் உண்மை என கண்ணியம் குன்றாது சொல்கிறார். மாற்றுக் கருத்துள்ளவர்களை புழுதி வாரித்தூற்றாமல் உண்மையை உணரவைக்கிறார். கண்களுக்கு திரை மாட்டிய குதிரைபோல் அக்கம் பக்கம் பாராது செல்லாமல் உண்மை எது பொய் எது என்று ஒவ்வொன்றாக விளக்கமாக சொல்லியிருக்கிறார். இப்படி சில மேன்மையான கட்டுரைகளும் அத்தி பூத்தாற்போல் எப்போதாவது எங்காவது வருவதுண்டு. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? படைப்பெல்லாம் நயம்கூறும் உயர்படைப்பாகுமா? என்று பாடத்தோன்றுகிறது.


– சங்கர சுப்பிரமணியன்.
Posted by அகரன்

நாள் : 3-Jan-19, 8:17 pm

மேலே