கைப்பேசி கையில் 'பேசி' கண்டோன் வாழ்க! வைய கத்தின்...
கைப்பேசி
கையில் 'பேசி'
கண்டோன் வாழ்க!
வைய கத்தின்
வரம்தான் வாழ்க!
மையைத் தடவும்
மந்திரம் போல,
செய்யும் வித்தை
செய்தோன் வாழ்க!
பொய்யும் உரைக்கும்!
புகழ்ந்தும் உரைக்கும்!
பெய்யும் மழையாய்
பேசிக் களைக்கும்!
மெய்யாய் உரைக்கின்,
மேதினில் 'பேசி'
வைய கத்தின்
வரம்தான்! வாழ்க!
மா.அரங்கநாதன்.